பணம் கேட்டு மிரட்டல்… தமிழக-கேரள எல்லையில் மாவோயிஸ்டு சுட்டுக் கொலை
Recommended Video

வயநாடு: கேரள எல்லைப் பகுதியான வயநாடு மாவட்டம் லக்கிடி பகுதியில் நேற்று இரவு போலீசாருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒரு மாவோயிஸ்ட் என்கவுண்டர் செய்யப்பட்டார், மற்றொருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

தமிழக-கேரள எல்லைப் பகுதியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வைத்திரி அடுத்த லக்கிடி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் உணவு விடுதியில் நேற்று இரவு 9 மணி அளவில் 4 மாவோயிஸ்டுகள் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அந்த விடுதியின், மேலாளர் அதே பகுதியில் முகாமிட்டுள்ள அதிரடி விரைவு படையினருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக விரைந்து வந்த அதிரடிப்படையினர் மாவோயிஸ்டுகளை சுற்றிவளைத்து துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில், இருவருக்கு குண்டடிபட்டதாக கூறப்படுகிறது. மாவோயிஸ்டுகளும் துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிகிறது.

இதனை அடுத்து அருகே இருந்த அடர்ந்த வனப்பகுதிக்குள் மாவோயிஸ்டுகள் நுழைந்தனர். அதிரடி விரைவு படையினரும் அவர்களை பின்தொடர்ந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஒருவர் இறந்து கிடப்பது தெரியவந்தது. மற்ற மூன்று பேர்களை தேடும் பணியை தொடர்ந்து வருகிறது.
தப்பி ஓடிய 3 மாவோயிஸ்டுகள் தமிழகப் பகுதியில் நுழைந்து இருக்கக்கூடும் என கூறப்படுவதால் தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications