For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் !!

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: மருத்துவ படிப்பில் சேர்வதற்கான ‛நீட்' எனப்படும் அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு மே-7 ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக விண்ணபிக்க இன்று கடைசி நாளாகும்.

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைகழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.

March 1 is last date to apply for NEET examination

இதனையடுத்து இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதுவோர் www.cbseneet.nic.in என்ற இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக ஆன்லைன் மூலம் விண்ணபிக்கும் முறை கடந்த ஜனவரி மாதம் 31-ம் தேதி துவங்கியது.

தமிழ் உள்ளிட்ட 8 மொழிகளில் நடத்தப்படும் இத்தேர்வில் 10 லட்சம் மாணவர்கள் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது. 1500க்கும் மேற்பட்ட மையங்களில் இத் தேர்வு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் நுழைவுத் தேர்வு எழுத அதிகபட்ச வயது 25 ஆக நிர்ணயம் செய்து சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

மே மாதம் 7-ம் தேதியன்று நீட் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும். நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரும் சட்ட மசோதாவிற்கு இன்னும் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
NEET examination Application Form submission last date, 01 Mar 2017
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X