'மங்கள்யான்' சுற்றுவட்டப் பாதை அதிகரிக்கும் பணி வெற்றிகரமாக நிறைவு
ஸ்ரீஹரிகோட்டா: செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட ‘மங்கள்யான்' விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதையை அதிகரிக்கும் பணி முற்றிலும் நிறைவடைந்ததாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி.-சி-25 ராக்கெட் மூலம் ‘மங்கள்யான்' விண்கலம் நவம்பர்- 5 அன்று பிற்பகல் 2.38 மணிக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த 7- ஆம் தேதியன்று மங்கள்யான் விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதை முதல் முறையாக அதிகரிக்கப்பட்டது. 8-ஆம் தேதி 2வது முறையாகவும், 8-ஆம் தேதி 3வது முறையாகவும் சுற்றுவட்டப் பாதையை அதிகரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
விண்கலத்தின் பாதையை 4-வது முறையாக அதிகரிக்கும் முயற்சியின்போது சிறிய தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. பிறகு, அந்தக் கோளாறு சரிசெய்யப்பட்டதால் விண்கலம் திட்டமிட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
நவம்பர் 16-ஆம் தேதியுடன் இந்தப் பணி முற்றிலுமாக நிறைவு பெறும் என தெரிவித்திருந்தனர். அதன்படி இன்று அதிகாலையில் 1.27 மணிக்கு சுற்றுவட்டப் பாதை 5-வது மற்றும் கடைசி முறையாக அதிகரிக்கப்பட்டது.
மங்கள்யான் விண்கலத்தின் சுற்று வட்டப் பாதை தற்போது 1 லட்சத்து 92 கிலோமீட்டராக அதிகரிப்பட்டுள்ளது. இதனையடுத்து ‘மங்கள்யான்' விண்கலம் படிப்படியாக அதன் தூரத்தை அதிகப்படுத்தி செவ்வாயை நோக்கி பயணமாகும்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications