'இதுவே என் கடைசி புகைப்படம்' வீரமரணம் அடையும் முன் ராணுவ மேஜர் குடும்பத்துக்கு அனுப்பிய வாட்ஸ் அப்
Recommended Video
மீரட்: தீவிரவாதிகளின் தாக்குதலால் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ மேஜர் கேதன் சர்மா, இறந்து போவதற்கு சில மணி நேரம் முன்பு இதுதான் என் கடைசி புகைப்படம் என்று கூறி அனுபபி இருந்தார். அடுத்த சில மணி நேரத்தில் தெற்கு காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான சண்டையில் சர்மா உயிரிழந்துவிட்டார். சர்மாவின் மறைவால் அவரது குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் இருக்கிறார்கள்.
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்தவர் கேதன் சர்மா. இவர் கடந்த 2012ம் ஆண்டு தேசிய பாதுகாப்பு படையில் சேர்ந்தார். இவருக்கு எரா என்ற மனைவியும் 4 வயதில் கைரா என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.
மேஜர் கேதன் சர்மா 9 ராஷ்ட்ரிய ரைஃபில்ஸ் படைப்பிரிவில் சேர்ந்து நாட்டிற்காக சேவையாற்றிவந்தார். ஆனந்த்நாக் மாவட்டத்தில் பணியாற்றி வந்தார்.

வாட்ஸ் அப் குரூப்
கடந்த திங்கள்கிழமை காலை 7 மணிக்கு, மேஜர் கேதன் சர்மாவிடமிருந்து அவரது குடும்பத்தினரின் வாட்ஸ்அப் குரூப்பிற்கு ஒரு புகைப்படத்துடன் அதிர்சசி மெஸேஜ் வந்துள்ளது. அதில் "இதுவே என் இறுதிப் புகைப்படமாக இருக்கும்!" என்ற செய்தியுடன் அவரது புகைப்படத்தோடு அனுப்பி உள்ளார்.

தீவிரவாதி கொலை
அடுத்த சில மணி நேரத்தில், தெற்கு காஷ்மீரில் ஆனந்த்நாக் மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில், தலையில் குண்டுதுளைத்து கேதன் சர்மா வீரமரணம் அடைந்தார். இந்தச் சண்டையில் தீவிரவாதி ஒருவனும் கொல்லப்பட்டான்.

கேதனின் உடலுக்கு அஞ்சலி
இந்நிலையில் கேதன் சர்மா மரணம் அடைந்த செய்தியை கேட்டு அவரது குடும்பத்தினர் மிகுந்த அதிர்ச்சிஅடைந்தனர். மேஜர் கேதனின் உடல், அவரது சொந்த ஊரான உத்தரப்பிரதேசத்திலுள்ள மீரட் நகருக்குக் கொண்டுவரப்பட்டது. அங்கு ராணுவ அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கேதனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். எல்லாரும் அழுதபடி இருந்ததை பாரத்த கேதனின் நான்கு வயது குழந்தை கைரா, அப்பா எங்கே என அங்கிருந்தவர்களிடம் கேட்டார். இதனை கேட்டு நொறுங்கிப்போன ராணுவத்தினர் கதறி அழுதனர்.
|
நாட்டுக்காக வீரமரணம்
கேதன் சர்மா இந்திய ராணுவத்தில் சேரும் முன்பு கூர்கானில் பெரிய சம்பளத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். ராணுவத்தில் வேலை கிடைத்ததும், அந்த வேலையை உதறிவிட்டு நாட்டுக்காக சேவையாற்றி வந்தார். திங்க்ள்கிழமை அன்று தன்னோடு தீவிரவாதிகளுடன் சண்டை போட்ட மேஜர் ராகுலை காப்பாற்றியுள்ளார். அதன்பிறகான சண்டையில் தான் தலையில் குண்டு பாய்ந்த கேதன் சர்மா வீரமரணம் அடைந்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications