Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பல்லிளிக்கும்" ப்ராமிஸ்.. அடுத்த "வேட்டு" வைத்த தாலிபன்கள்.. கலங்கி போன ஆப்கன் பெண்கள்.. இதுலயுமா?

Subscribe to Oneindia Tamil

காபூல்: நாளுக்கு நாள் பிறப்பிக்கப்படும், புதிய புதிய உத்தரவுகளை கண்டு, ஆப்கன் பெண்கள் திணறிப்போயுள்ளனர். இப்போது இன்னொரு கட்டுப்பாட்டை கொண்டுவந்துள்ளனர் தாலிபன்கள்.

தாலிபன்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே பல்வேறு கட்டுப்பாடுகளை பெண்களுக்கு விதித்து வருகிறார்கள்.. அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் பெண்கள் கல்வி பயில தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பல்கலை கல்வி நிலையங்களில் கூட ஆண்களுடன் சேர்ந்து படிக்கவும் அனுமதி அளிக்கவில்லை.

 Massive announcement by Talibans and ban on Afghan girls getting education beyond 3rd grade

ஆண்கள் துணையின்றி விமானங்களில் பயணிக்க தடை, பொது இடங்களில் ஆடை கட்டுப்பாடு, பொழுதுபோக்கு பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் செல்ல தடை என பெண்களுக்கு பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதேபோல, தங்கள் சிகிச்சைக்காக, ஆண் டாக்டரை பெண்கள் அணுகக்கூடாது என்று அடுத்த உத்தரவை பிறப்பித்தது தாலிபன் அரசு..

கல்வி உரிமை: பெண்களுக்கு கல்வி கற்க உரிமை மறுக்கப்பட்டிருப்பதால் பெண் டாக்டர்களும் அங்கு உருவாகாத சூழல் நிலவி வருகிறது. அதுமட்டுமல்ல, அங்குள்ள துணிக்கடைகளில் பார்வைக்கு வைக்கப்படும் பெண் பொம்மைகளின், முகத்தை மறைத்துதான் காட்சிப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

விளையாட்டு: சிறுவர்கள் கேம் சென்டர்களுக்கு செல்லக்கூடாது, பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது, குறிப்பாக ஐநா சபையில் எந்த துறையிலும் ஆப்கன் பெண்கள் வேலையில் இருக்கக்கூடாது, ஜிம் போகக்கூடாது, பூங்காக்களுக்கு போகக்கூடாது இப்படியான உத்தரவுகளும் தொடர்கின்றன.. அவ்வளவு ஏன்? தோட்டங்களுக்குகூட போகக்கூடாது.. புல்வெளிகள் அமைந்துள்ள ஓட்டல்களுக்கு பெண்கள் போகக்கூடாது, பியூட்டி பார்லர்கள் போகக்கூடாது, என்றெல்லாம் தடைகள் தொடர்கின்றன.

புர்கா விவகாரம்: புர்கா அணியாமல் வெளியே செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு ஏற்கனவே நடைமுறையில் இருந்தாலும், புதிய அறிவிப்பினை கடந்த வாரம்கூட, தாலிபான்கள் வெளியிட்டிருந்தனர். பெண்கள் வெளியில் காரில் செல்லும்போதும்கூட, ஆண் துணை இல்லாமல் செல்லக்கூடாது என்றும், காரிலேயே சென்றாலும்கூட, கட்டாயம் புர்கா உடை அணிந்து செல்லவேண்டும் என்றும் தலிபான் அரசு உத்தரவிட்டிருந்தது.

வாகனம் பறிமுதல்: முழு உடலையும் மூடாத பெண்களை டாக்ஸியில் அழைத்து சென்றால், அந்த டிரைவர் தலிபான்களால் தாக்கப்படுவார் என்றும், அவரது வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரிக்கப்படுவார்கள் என்றும் ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தன. இதோ இன்னொரு அறிவிப்பு வந்துவிட்டது. அதாவது, ஆப்கானிஸ்தானில் 3ம் வகுப்புக்கு மேல் பெண்கள் கல்வி கற்க தாலிபன் அரசு தடை விதித்துள்ளது. 10 வயதுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகள் கல்வி கற்க அனுமதி இல்லையாம்..

தாலிபன் அரசின் கல்வித்துறையானது, சில மாகாணங்களில் இயங்கி வரும் பள்ளிகள் மற்றும் பயிற்சிக் கூடங்களின் தலைமை ஆசிரியர்களிடம் இவ்வாறு கூறியிருப்பதாக பத்திரிகை நிறுவனங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. 10 வயதுக்கு மேல் உள்ள பெண் குழந்தைகளை வீட்டுக்கு அனுப்பவும், அவர்களுக்கு தலிபான் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன..

ஆறாம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர், "எங்களை பள்ளிக்குள் நுழைய அனுமதிக்கவில்லை" என்று கவலையுடன் சொல்கிறாராம்.

3ம் வகுப்பு வரை மட்டுமே: ஆட்சிக்கட்டிலில் ஏறும்போது, பெண் கல்வி, பெண் சுதந்திரம் பேணப்படும் என்றும், உலக நாடுகளுடன் நட்புறவு ஏற்படுத்தப்படும் என்றும் தாலிபன்கள் உறுதியளித்தனர்.. ஆனால், நடந்து கொண்டிருப்பதெல்லாம் நேர்மாறாக உள்ளது. பெண்களுக்கு கிடைக்கும் சுதந்திரத்தை, தாலிபான் அரசின், புதிய உத்தரவு இன்னும் மோசமடைய செய்துள்ளதாக மகளிர் அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன.

"போதுமான அளவு ஆசிரியர்கள் இல்லாத காரணத்தினால் 6-ம் வகுப்புக்கு மேல் பெண்கள் கல்வி கற்பதற்கு தடை விதிக்கப்படுவதாக" தாலிபன்கள் முன்பு ஒருமுறை விளக்கம் அளித்திருந்தனர்.

கல்வி உரிமை: ஆனால், இதற்கு அப்போதே ஐநா தன்னுடைய கருத்தை தெரிவித்திருந்தது. ''கல்வி என்பது அடிப்படை மனித உரிமை.. பெண்களின் கல்விக்கான கதவு மூடப்பட்டால், அது ஆப்கானிஸ்தானின் எதிர்காலத்தின் கதவு மூடப்பட்டதாகவே பொருள்'' என்று ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பொதுச்செயலாளர் கருத்து கூறியிருந்தார்.

பல்கலைக்கழக விவகாரம் நடந்தபோது, காபூல் பல்கலைக்கழக மாணவி ஒருவர் பிபிசி-க்கு அளித்த பேட்டி ஒன்றில், "என்னுடைய எதிர்காலத்துடன் என்னை இணைப்பதற்கு இருந்த ஒரே பாலத்தையும் அழித்து விட்டனர்" என்று கூறியிருந்தார்.

"இஸ்லாமும் அல்லாஹ்வும் எங்களுக்கு வழங்கிய உரிமைகளை தாலிபன்கள் பறித்துள்ளனர்" என்று இன்னொரு சட்டக்கல்லூரி மாணவி, அதே பிபிசி-க்கு அளித்த பேட்டியில் பதிவு செய்திருந்தார். இந்நிலையில், இப்போது 6ம் வகுப்பு மாணவியும் தன்னுடைய வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
"தாலிபன்கள் உலக அங்கீரம் பெற வேண்டுமானால், பெண் கல்வியை நிறைவேற்ற வேண்டும்" என்ற நிபந்தனையை மேற்கத்திய நாடுகளும் தொடர்ந்து வலியுறுத்தி கொண்டிருப்பது நினைவுகூரத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+