மும்பை: பந்த்ரா ரயில் நிலைம் அருகே குடிசை பகுதியில் பயங்கர தீவிபத்து
மும்பை பந்த்ரா ரயில் நிலையம் அருகே குடிசை பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
மும்பை: மும்பையின் பந்த்ரா ரயில் அருகே குடிசை பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர தீவிபத்தில் இதுவரை 2 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பந்த்ரா ரயில் நிலையத்தின் வெளியே குசைப் பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள் கட்டிடங்களை இடிக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குடிசைகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீயானது ரயில் நிலையத்தின் நடைபாதைக்கும் பரவியது. சம்பவ இடத்துக்கு 16 தீயணைப்பு வண்டிகள், 17 தண்ணீர் டாங்கர் லாரிகள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.
பல மணிநேரம் தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. மேற்கு எக்ஸ்பிரஸ் ஹைவே பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது.
இந்த தீவிபத்தால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. பின்னர் ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன.


Click it and Unblock the Notifications
