ஒடிசா ரயில் விபத்து.. அதிகபட்ச தண்டனை என்ன? சிபிஐ எப்ஐஆரில் சொல்வது என்ன? பகீர் தகவல்கள்
புவனேஸ்வர்: ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 337, 338, 304A (அலட்சியத்தால் மரணத்தை ஏற்படுத்துதல்) மற்றும் 34 (பொது நோக்கம்), மற்றும் ரயில்வே சட்டம் பிரிவுகள் 153 (ரயில்வே பயணிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சட்டவிரோத மற்றும் அலட்சிய நடவடிக்கை), 154 மற்றும் 175 (உயிர்களுக்கு ஆபத்து) ஆகியவற்றின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே பாஹாநாகா பஜார் ரயில் நிலையத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு சரக்கு ரயில் மீது மோதி தடம் புரண்டது. அந்த நேரத்தில் அங்கு வந்த பெங்களுருவில் ஹவுரா நோக்கி வந்த ரயில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் இதுவரை 288 பேர் பலியாகி உள்ளனர். சுமார் 1000 பேர் படுகாயம் அடைந்தனர்.

முதற்கட்டமாக விபத்து குறித்து வெளியான தகவலின் படி, பாய்ண்ட் 17 ஏ மாறாததே இந்த விபத்திற்கு காரணம் என்று சொல்லப்பட்டது. மொத்தம் 55 பேர் இந்த விபத்து தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ரயில்வே ஆணையர் சார்பில் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதாவது விபத்துக்கு முன்பாக அந்த வழித்தடத்தில் ரயில்களை இயக்கியவர்கள் ஊழியர்கள் உள்பட மொத்தம் 55 பேருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே ஒரு பக்கம் விசாரணை நடத்தி வரும் நிலையில் சிபிஐயும் மறுபக்கம் குற்றவியல் அலட்சியம் தொடர்பாக விசாரணையை தொடங்கி உள்ளது. 288 பேரின் உயிரிழப்புக்கும் ஆயிரக்கணக்கான பயணிகள் காயம் அடைந்ததற்கு காரணம் குறித்தும் புதிய வழக்குகளை செவ்வாய்கிழமை அன்று சிபிஐ தொடர்ந்துள்ளது.
முன்னதாக ஒடிசாவின் கட்டாக் ரயில்வே போலீசார் இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.

குற்றச்சாட்டுகள் மற்றும் தண்டனை: இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 337, 338, 304A (அலட்சியத்தால் மரணத்தை ஏற்படுத்துதல்) மற்றும் 34 (பொது நோக்கம்), மற்றும் ரயில்வே சட்டம் பிரிவுகள் 153 (ரயில்வே பயணிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சட்டவிரோத மற்றும் அலட்சிய நடவடிக்கை), 154 மற்றும் 175 (உயிர்களுக்கு ஆபத்து) ஆகியவற்றின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தண்டனை என்ன: ரயில்வே சட்டத்தின் பிரிவு 153 மட்டுமே அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்குகிறது, மற்ற பிரிவுகளுக்கு இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவான தண்டனைகள் உள்ளன .
விபத்திற்கு என்ன காரணம்: மேலே செல்லும் மின்சார வயர்கள் அறுந்து ரயில் பெட்டிகளில் விழுந்ததாலும், அதனால் மின்சாரம் தாக்கியதாலும் பல உயிரிழப்புகள் ஏற்பட்டதாக எப்ஐஆர் கூறுகிறது. மூன்று ரயில்களும் விபத்தில் சிக்கி பெட்டிகள் கவிழ்ந்ததால் மின்கம்பங்கள் கீழே விழுந்ததால் அதிக சக்திவாயந்த மிக கம்பிகள் அறுந்து விழுந்தன. இதுவே அதிக உயிரிழப்பு காரணம் என்று கூறப்படுகிறது.
ஒத்துழைப்பு தேவை: ரயில்வேயின் செயல்பாடுகளை கையாள்வதில் சிபிஐக்கு அதிக நிபுணத்துவம் இல்லை. வழக்கின் அடிப்பகுதிக்கு செல்ல ரயில் பாதுகாப்பு மற்றும் தடயவியல் நிபுணர்களின் உதவி தேவைப்படலாம். அதன்படி, விசாரணை முன்னேறும் போது, சிபிஐ தனது குற்றப்பத்திரிகையில் எப்ஐஆரில் ஒரு குற்றச்சாட்டை சேர்க்கலாம் அல்லது நீக்கலாம்.
ரயில்வே விசாரணை அறிக்கை: ஒடிசா ரயில் விபத்து குறித்து விசாரிக்கும் முதற்கட்ட விசாரணைக் குழுவின் உறுப்பினர், சிக்னல் அமைப்பில் எந்தத் தவறும் இல்லை என்று அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.அதேநேரம் ரயில்வே அதிகாரி ஒருவரோ, மெயின் லைனில் குறுக்கீடு இல்லாமல், லூப் லைனுக்கு கிரீன் சிக்னல் தந்திருக்க முடியாது என்று கூறினார். எலக்ட்ரானிக் இன்டர்லாக் மாற்றத்தால் ரயில் விபத்து ஏற்பட்டது என்றும் கூறினார்.
தற்போதைய நிலையில் ஒடிசா அரசு ரயில் விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 288 ஆக உயர்த்தியுள்ள தெரிவித்துள்ளது. இந்நிலையில் மருத்துவமனைகள் மற்றும் பிணவறைகளில் 83 உரிமை கோரப்படாத உடல்கள் இருக்கின்றன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications