ரன் வாரி கொடுத்த பின்னியை இப்படியா அசிங்கப்படுத்துவது.. மனைவி கொடுத்த பதிலடியை பாருங்க #StuartBinny
மும்பை: ஒரே ஓவரில் 32 ரன்களை வாரி கொடுத்த இந்திய பவுலர் ஸ்டூவர்ட் பின்னியை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கேலி கிண்டல் செய்துவந்தனர். அவரது மனைவியும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொகுப்பாளியுமான மாயந்தி லாங்கரும், செக்சியாக விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டார்.
இந்த விமர்சனங்களுக்கு மாயந்தி தக்க பதிலடி கொடுத்து ஒரு இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் போஸ்டை வெளியிட்டுள்ளார்.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஸ்டூவர்ட் பின்னி, ஒரு ஓவரில் 5 சிக்சர்கள் வழங்கினார். மொத்தம் 32 ரன்கள் அந்த ஓவரில் கிடைத்தது.

அவதூறு
இதையடுத்து டிவிட்டர், பேஸ்புக்கில் ஸ்டூவர்ட் பின்னி கடும் விளாசலுக்கு உள்ளாகியுள்ளார். மேலும் அவரது மனைவியை குறித்து அவதூறாகவும் விமர்சனங்களை எழுதி தங்கள் ஆழ்மன அழுக்குகளை வெளிப்படுத்தி வந்தனர் நெட்டிசன்கள்.
— Mayanti Langer Binny (@MayantiLanger_B) September 1, 2016 |
தற்கொலை
இந்நிலையில் மாயந்தி கொடுத்துள்ள பதிலடியில் கூறியுள்ளதாவது: நீங்கள் விரும்புபவர்களை தற்கொலை செய்ய யாரும் உங்களை வலியுறுத்தி இருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன் (பின்னியை தற்கொலை செய்யுமாறு சிலர் டிவிட்டியிருந்தனர்).

ஜோக் அல்ல
தற்கொலையால் கஷ்டப்படும் குடும்பங்களின் நிலையை நினைத்து பாருங்கள். அது ஒரு பெரும் துக்கம். நீங்கள் அதை ஜோக்காக கையாளுகிறீர்கள்.
|
காதல் என்றால் என்ன தெரியுமா
உங்களுக்கு காதல் மற்றும் விசுவாசம் என்றால் என்னவென தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். என்னை டைவர்ஸ் செய்ய சொல்வோருக்கு அது இல்லைபோலும்.

போய் வேலை வெட்டிய பாருங்க
நான் 18 வயதில் இருந்து உழைத்து வருவாய் ஈட்டுகிறேன். என்னை கேலி செய்வதைவிட்டுவிட்டு உங்களையும், உங்களது குடும்பத்தாரையும் வேலை செய்து காப்பாறுங்கள். இப்படி செருப்பால் அடிப்பதை போல கேட்டுள்ளார் மாயந்தி.

அதானே
விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம். 6 பந்துகளில் 6 சிக்சர் அடித்த யுவராஜ்சிங் இன்று இந்திய அணியில் இடம் பிடிக்கவே திணறி வருகிறார். ஆனால் 6 சிக்சர்களை வாரி வழங்கிய இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் சர்வதேச சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக உள்ளார். மேலும், நாலே ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை (வங்கதேசத்துக்கு எதிராக-2014) வீழ்த்திய ஒரே இந்திய பவுலர் என்ற சாதனைக்கு ஸ்டூவர்ட் பின்னி சொந்தக்காரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications