கூட்டணிக் கட்சிகளுக்கு எந்தெந்த மேயர், துணை மேயர் இடங்கள்? - திமுக வெளியிட்ட பட்டியல்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கான மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர் பதவிகளுக்கான இடப்பங்கீட்டை தி.மு.க தலைமை அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மேயர் பதவியும் சி.பி.எம், சி.பி.ஐ, ம.தி.மு.க, வி.சி.க ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு துணை மேயர் பதவிகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை அடுத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய அமைப்புகளில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள், புதன்கிழமை காலையில் பதவியேற்றுக் கொண்டனர். இதையடுத்து, மாநகராட்சிகளில் மேயர், துணை மேயர் பதவிகள் யார் யாருக்கு வந்து சேரும்?' என்ற விவாதம் கிளம்பியது.

குறிப்பாக, கடந்த சில நாட்களாக தி.மு.க கூட்டணி கட்சிகள், தங்களின் செல்வாக்குக்கு ஏற்ப தாங்கள் கேட்கும், மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர், துணைத் தலைவர், பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவர் பதவிகளின் பட்டியலை தி.மு.க.வுக்கு அளித்தன.
இந்தப் பட்டியலை தி.மு.கவின் முதன்மை நிலைய செயலாளர் கே.என்.நேரு, அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட குழுவினர் ஆய்வு செய்து வந்தனர். இவர்கள் கூட்டணிக் கட்சிகளுடன் பேசி இறுதி முடிவுக்கு வந்தனர்.
காங்கிரஸ் கட்சிக்கு...
இந்நிலையில், கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் தொடர்பான விவரத்தை தி.மு.க தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சிக்கு சேலம், காஞ்சிபுரம் ஆகிய மாநகராட்சிகளின் துணை மேயர் பதவிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், நகராட்சிகளைப் பொறுத்தவரையில் தேவகோட்டை, தேனி, காங்கேயம், சுரண்டை, கருமத்தம்பட்டி, கோபிச்செட்டிபாளையம் ஆகியவை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
- தமிழக கவுன்சிலர்கள் ஆகும் 2K கிட்ஸ் முதல் வயோதிக தம்பதிவரை - சுவாரஸ்ய தகவல்கள்
- 100 வார்டுகள் கொண்ட கோவை மாநகராட்சி - நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்
அதேநேரம், கூடலூர், ஆரணி, நரசிங்கபுரம், காரமடை, குடியாத்தம், திருவேற்காடு, குன்னத்தூர், தாராபுரம், உசிலம்பட்டி ஆகிய ஒன்பது நகராட்சித் துணைத் தலைவர் பதவிகளும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. பேரூராட்சிகளைப் பொறுத்தவரையில் மங்களம்பேட்டை, சின்னசேலம், வடுகபட்டி, பூலாம்பட்டி, பிக்கட்டி, பேரையூர், பட்டிவீரன்பட்டி, ஸ்ரீபெரும்புதூர் ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
சி.பி.எம். என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மதுரை மாநகராட்சி துணை மேயர் பதவியைப் பெறுகிறது.
திருமுருகன்பூண்டி, கொல்லன்கோடு ஆகிய நகராட்சித் தலைவர் பதவிகளும் திருத்துறைப்பூண்டி, சிதம்பரம், பழனி ஆகியவற்றின் நகராட்சித் துணைத் தலைவர் பதவிகளும் பெரியநாயக்கன் பாளையம், வீரவநல்லூர், அந்தியூர் ஆகிய பேரூராட்சித் தலைவர் பதவிகளும் இந்தக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
சிபிஐ என சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் பதவியும் கூத்தாநல்லூர் நகராட்சித் தலைவர் பதவியும் ஒதுக்கப்பட்டுள்ளன. பவானி, புளியங்குடி, அதிராம்பட்டினம், போடிநாயக்கனூர் ஆகியவற்றின் நகராட்சித் துணைத் தலைவர் பதவிகளும் சி.பி.ஐ கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், பேரூராட்சிகளைப் பொறுத்தவரையில் வத்திராயிருப்பு, பூதப்பாண்டி, சிவகிரி, புலியூர் ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளன.
விடுதலைச் சிறுத்தைகள்
இறுதியாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு கடலூர் மாநகராட்சி துணை மேயர் பதவியும் ஜெயங்கொண்டம், நெல்லிக்குப்பம் ஆகிய நகராட்சிகளும் பெண்ணாடம், காடையாம்பட்டி, பொ.மல்லபுரம் ஆகிய பேரூராட்சிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. நகராட்சித் துணைத் தலைவர் பதவியைப் பொறுத்தவரையில் திண்டிவனம், பெரியகுளம், ராணிப்பேட்டை ஆகியவை வி.சி.கவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
மதிமுக
ம.தி.மு.கவுக்கு ஆவடி துணை மேயர் பதவியும் மாங்காடு நகராட்சித் தலைவர் பதவியும் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேநேரம், பரமக்குடி, கோவில்பட்டி, குளித்தலை ஆகியவற்றின் நகராட்சித் துணைத் தலைவர் பதவிகளும் ம.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. திருவேங்கடம், ஆடுதுறை, சென்னசமுத்திரம் ஆகிய பேரூராட்சிகளும் ம.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
பிற செய்திகள்:
- ரஷ்ய படையெடுப்பு: யுக்ரேனின் எதிர்காலம் என்ன?
- யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலன்ஸ்கி: நாடகத்தில் அதிபரானவர், நாட்டில் அதிபரான கதை
- யுக்ரேன் தலைநகர் கீயவ் தெருக்களில் கடும் சண்டை: வெடிகுண்டு சத்தம் - நேரலை செய்தி
- யுக்ரேனில் ரஷ்யாவின் நுழைவு குறித்து ரஷ்யர்களின் மனநிலை என்ன?
- யுக்ரேன்: ரஷ்யா மீது விதிக்கப்படும் தடைகள் என்ன? சர்வதேச உறவுகளில் தடைகளின் பொருள் என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்
-
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications