"பர்த்டே பார்ட்டி".. பெண் சிஇஓவை "அழைத்த" எம்.டி... கிடைத்தது ஜெயில்!
பெங்களூரு: தனியார் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றும் பெண்ணை பிறந்தநாள் பரிசாக உறவுக்கு அழைத்த அந்நிறுவன நிர்வாக இயக்குநரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பிறந்த நாள் கேக் கொடுத்து உறவுக்கு அழைத்த எம்.டி இப்போது ஜெயிலில் களி திண்கிறார்.
50 வயதாகும் ஜான் என்பவர் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் தனது பிறந்தநாளான்று பரிசாக, நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வரும் ஷில்பா என்பவரை ஒரு நாள் இரவு தன்னுடன் ஹோட்டல் அறையில் தங்கும்படி வற்புறுத்தியுள்ளார். அப்படி வர மறுத்தால் மானபங்கம் செய்துவிடுவதாக மிரட்டியதாக தெரிகிறது.

ஜான் பலமுறை பொது இடம் என்றுக்கூட பாராமல் ஷில்பாவிடம் தவாறாக நடந்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஜானின் பாலியல் துன்புறுத்தலை சகிக்க முடியாமல் ஷில்பா போலீசில் பாலியல் புகார் அளித்தார். வேலைக்கு சேர்ந்த சில நாட்களிலேயே ஜான் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அதில் குறிப்பிட்டுள்ளார். நெருங்கி உறவாடுவது, தகாத இடங்களில் தொடுவது என தொடர்ந்து சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும், ஆகஸ்ட் 1 ஆம் தேதி சென்னைக்கு பணி நிமித்தமாக தன்னுடன் பயணிக்க சொல்லியும் வற்புறுத்தியதாக புகாரில் தெரிவித்துள்ளார்.
ஜான் மீது புகார் அளித்துள்ளதாகவும், ஜானிடம் இருந்து தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும் புகாரில் கூறியுள்ளதாகவும் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார் ஷில்பா. இந்த நிலையில், பொம்மனஹல்லி போலீசார் ஜானை கைது செய்து பல்வேறு குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இதற்கிடையே, கணவரை விட்டு பிரிந்து வாழும் ஷில்பா ஜானுடன் நெருக்கம் கட்டியதாகவும், நட்பையும் தாண்டி அவர்களுக்குள் ஏதோ இருப்பதாகவும் அவர்களின் நிறுவனத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. இருவரும் பல முறை திருவனந்தபுரம், சென்னை என பல ஊர்களுக்கு தனியாக சென்று ஒரே ஹோட்டல் ரூமில் தங்கியுள்ளனர் என்றும், இருவரும் இணைந்து புதிய நிறுவனம் ஒன்றை தொடங்கியிருப்பதாகவும், அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியம் அளிக்க வேண்டுமென்றால் ஷில்பா பிறந்தநாள் பரிசாக தன்னுடன் ஒரு இரவு தங்க வேண்டுமென்று ஜான் நிர்பந்தித்தார் என்றும் அதனால்தான் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாகவும் ஒரு தகவல் கூறுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications