For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திக் விஜய் சிங் குடும்பத்தை வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளோர் பட்டியலில் சேர்த்த புண்ணியவான்கள்!

Google Oneindia Tamil News

பனாஜி: மத்திய அரசு மற்றும் மத்தியப் பிரதேச அரசு வெளியிட்டுள்ள வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளோர் பட்டியல்களில் தனது பெயரும், தனது குடும்பத்தினரின் பெயரும் இடம்பெற்றுள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளரும், முன்னாள் மத்திய பிரரேச முதல்வரும் தெரிவித்துள்ளார். இது குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள அவர், நாங்கள் வரி கட்டும் நிலையில், எவ்வாறு இது நிகழ்ந்துள்ளது என்று கேள்வி எழுப்புள்ளார்.

கட்சி நிகழ்சியில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் பொதுச்செயலாளரும், முன்னாள் மத்திய பிரரேச முதல்வருமான திக்விஜய் சிங் நேற்று கோவா சென்றிருந்தார். அப்போது பனாஜியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மத்திய அரசும், மத்தியப் பிரதேச அரசும் அண்மையில் வெளியிட்டுள்ள வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்களின் பெயர் பட்டிலை வெளியிட்டது. அதில் எனது பெயரும், எனது சகோதரர், மகன் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. ஆனால், நாங்கள் அனைவரும் வருமான வரி கட்டுகிறோம் என்று கூறினார்.

Me and my family are taxpayers, how can I be BPL, says Digvijaya Singh

இது குறித்து திக்விஜய் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை பெற நாங்கள் விண்ணப்பிக்கவும் இல்லை. அதன் மூலம் நாங்கள் ஆதாயம் அடைந்ததும் இல்லை. இதற்கு காரணமானவர்கள் மன்னிப்பு கோர வேண்டும். மேலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதற்கு பாஜக தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது: அதில் மனதளவில் ஏழையாக இருக்கும் முன்னாள் முதல்வர் மட்டும் தான், எவ்வாறு தனது பெயர் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் பட்டியலில் வந்தது என்பது குறித்து தெரிவிக்க வேண்டும் என கூறியுள்ளது.

English summary
After AICC General Secretary and former Madhya Pradesh Chief Minister Digvijay Singh and his family were included in the list of Below Poverty Line (BPL) people by the Central and State (MP) governments, Singh said, “I, my son & my brother are tax payers, how can I be BPL.”
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X