மேகாலயாவில் தொங்கு சட்டசபை! பாஜகவை அங்கீகரிக்காத மக்கள்! Zee News எக்சிட் போல் முடிவுகள்
மேகாலயாவில் என்பிபி கட்சி 21 முதல் 26 இடங்கள் வரை வெல்லும் என்கிறது ஜீ நியூஸ் எக்சிட் போல் முடிவுகள்
ஷில்லாங்: மேகாலயா மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு முடிந்துள்ள நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன.
அதன்படி ஜீ நியூஸ் நிறுவனத்தின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளின்படி மேகாலயா மாநிலத்தில் இந்த தேர்தலில் என்பிபி- 21- 26 (2018 ஆம்ஆண்டு தேர்தல் முடிவுகள்20), திரிணாமுல் காங் 8-13, பாஜக 6-11 (2), காங்கிரஸ் 3-6 (21), இதர கட்சிகள் 10-19 (17). இந்த கருத்து கணிப்பு முடிவுகளை பார்க்கும் போது எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
மேகாலயாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் கான்ராட் சங்கமாவின் என்.பி.பி கட்சி மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 18 இல்தான் வென்றது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ 21 இடங்களில் வென்றது. பெரும்பான்மைக்கு தேவை 31 இடங்கள். இந்த நிலையில் கான்ராட் சங்மா புத்திசாலித்தனமாக செயல்பட்டு பாஜக, இதர உதிரி கட்சிகளுடன் இணைந்து ஆட்சிக்கு வந்தார்.

என்பிபி பாஜக கூட்டணி
இந்த நிலையில் என்பிபி பாஜக கூட்டணி முறிந்துவிட்டது. இந்த 2023 ஆம் ஆண்டுக்கான சட்டசபை தேர்தலில் என்பிபி கட்சி 57 தொகுதிகளிலும் பாஜக 60 தொகுதிகளிலும் போட்டியிட்டது. இதற்கான வாக்குப்பதிவு இன்று நடந்து முடிந்தது. 74. 32 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள்
இந்த தேர்தல் முடிந்தவுடன் பல்வேறு செய்தி நிறுவனங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளன. அதன்படி ஜீ நியூஸ் நிறுவனத்தின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளின்படி மேகாலயா மாநிலத்தில் இந்த தேர்தலில் என்பிபி- 21- 26 (2018 ஆம்ஆண்டு தேர்தல் முடிவுகள் (20), திரிணாமுல் காங் 8-13, பாஜக 6-11 (2), காங்கிரஸ் 3-6 (21), இதர கட்சிகள் 10-19 (17).

மீண்டும் கூட்டணி ஆட்சியா
இந்த கருத்து கணிப்புகளை வைத்து பார்த்தோமேயானால் என்பிபி கட்சி மீண்டும் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்கும் என தெரிகிறது. பாஜக, உதிரி கட்சிகளுடன் இணைந்து என்பிபி ஆட்சியை பிடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கிறிஸ்துவர்கள் பெரும்பான்மையாக இருக்கும் இந்த மாநிலத்தில் மதசார்பற்ற கட்சிகளுக்கே மக்கள் வாக்களிக்கிறார்கள்.

கான்ராட் சங்மா
மேகாலயாவில் கான்ராட் சங்மாவுக்கு சவாலாக இருப்பவர் மேகாலயாவின் காங்கிரஸ் முகமாக இருந்த முகுல் சங்மா, 2018 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து 12 எம்எல்ஏக்களை கொத்தாக அழைத்துக் கொண்டு திரிணாமூல் காங்கிரஸில் இணைத்தார். இதனால் திரிணாமூல் காங்கிரஸ் அந்த மாநில சட்டசபையின் எதிர்க்கட்சியானது. இதனால் என்பிபி திரிணாமூல் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

பாஜக துணை கொண்டு ஆட்சி
இந்த கருத்து கணிப்புகளின்படி என்பிபி கட்சியே பாஜகவின் துணை கொண்டு ஆட்சி கட்டிலில் மீண்டும் அமரும் என தெரிகிறது. எனினும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும் நூலிழையில் சில வாய்ப்புகள் உள்ளன. எனவே மேகாலயாவில் ஆட்சியை பிடிப்பது யார் என்பதை அறிய மார்ச் 2 ஆம் தேதி வரை பொறுத்திருப்போம். எனினும் பாஜகவுக்கு மக்கள் அதிக அளவிலான ஆதரவை தரவில்லை என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications