காத்திருந்த மாமா குட்டி.. கணவனின் கதை முடித்த சோனம் ! 20 லட்சத்துக்கு டீல்.. மேகாலயா கொலையில் பகீர்

Subscribe to Oneindia Tamil

இந்தூர்: மேகாலயாவில் தேனிலவுக்கு சென்ற போது கூலிப்படை மூலம் கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் கணவனை கொலை செய்வதற்காக மனைவி சோனம், கூலிப்படைக்கு 20 லட்சம் ரூபாயை தர முன் வந்ததாகவும், கூலிப்படையினரை புக் செய்தபோது 15 ஆயிரம் ரூபாயை அட்வான்ஸ் கொடுத்ததாக தற்போது வெளியாகி உள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரைச் சேர்ந்த பிரபல டிராவல்ஸ் நிறுவன உரிமையாளரான ராஜா ரகுவன்சி என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 25 வயதான சோனம் என்பவருக்கும் மே 11ஆம் தேதி கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இருவரும் தேனிலவுக்காக மேகாலயா சென்று இருக்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த 23ஆம் தேதி ராஜா ரகுவன்சியையும் சுவனத்தையும் காணவில்லை என சொல்லப்படுகிறது. இதற்கிடையே கடந்த ஜூன் இரண்டாம் தேதி மேகாலயாவின் சிரபுஞ்சி பகுதியில் ராஜா ரகுவன்சியின் உடல் மீட்கப்பட்டது.

Meghalaya Honeymoon crime

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் ராஜா ரகுவரன்சியை கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. கொலை தொடர்பாக அவரது மனைவி சோனம், காதலன் ராஜ் குஷ்வாகா, கூலிப் படையைச் சேர்ந்த ஆகாஷ், விஷால், ஆனந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை நடத்திய நிலையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கடந்த மே 11ஆம் தேதி ராஜா ராஜா ரகுவன்சிக்கும் சோனத்துக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில் கணவனை கொலை செய்துவிட்டு காதலன் ராஜுடன் தப்பிச்செல்ல சோணம் திட்டமிட்டு இருக்கிறார்.

இதற்காகவே தேனிலவுக்கு செல்லவும் அவர் திட்டமிட்டு இருக்கிறார். ராஜா ரகுவன்சியும், சோனமும் மேகாலயா சென்ற நிலையில், காதலன் ராஜை செல்போனில் அழைத்த சோனம் கொலைக்கான சதி திட்டத்தை தீட்டி இருக்கிறார். தொடர்ந்து கூலிப்படையைச் சேர்ந்த ஆகாஷ், விஷால் ஆகியோர் கொலைத் திட்டத்தில் இணைந்தனர். இருவரும் இந்தூரில் இருந்து புறப்பட்ட போதே கொலையாளிகள் இருவரையும் பின் தொடர்ந்து இருக்கின்றனர்.

இதற்கிடையே மே 23ஆம் தேதி சிரப்புஞ்சியில் உள்ள ஒய் சவுடால் அருவிக்கு தம்பதி சென்றபோது அங்கு வந்த, ஆகாஷ், விஷால், ஆனந்த் ஆகியோர் தாங்களும் மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் தான் என அறிமுகமாகியுள்ளனர். பின்பு செல்ஃபி எடுக்க வேண்டும் என மலை உச்சிக்கு அழைத்துச் சென்றுள்ளார் சோனம். அப்போது அங்கு வந்த கூலிப் படையைச் சேர்ந்த ஆகாஷ் உள்ளிட்டோர் ராஜா ரகுவன்சியை கோடாலியால் தலையில் பலமாக தாக்கியுள்ளனர். உயிருக்கு போராடிய அவரை 200 அடி பள்ளத்தாக்கிலும் தூக்கி வீசி உள்ளனர்.

தொடர்ந்து இரண்டு இரு சக்கர வாகனங்களில் நான்கு பேரும் தப்பி உள்ளனர். மேலும் கொலை நடந்ததை சோனம் அருகில் இருந்து பார்த்து ரசித்து இருக்கிறார். பின்பு தான் அவர்கள் அங்கிருந்து தப்பி இருக்கின்றனர். இதற்கு இடையே கொலையாளிகளுக்கு 20 லட்சம் ரூபாயை தருவதாக உறுதி அளித்துள்ளனர் .மேலும் கொலை திட்டத்தை ப்ளான் செய்த உடனே 15,000 ரூபாயை அட்வான்ஸ் கொடுத்துள்ளனர். மேலும் தேனிலவுக்கு செல்லும் போதே லட்ச லட்சமாக பணத்தையும் சோணம் எடுத்துச் சென்றிருக்கிறார். சோனத்தை போலீசார் கைது செய்த போது அவரது கையில் 9 லட்சம் ரூபாய் ரொக்க பணமும் ஏராளமான தங்க நகைகளும் இருந்தது என போலீசார் கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+