மேகாலயாவில் 14 வயது சிறுமி பலாத்காரம்.. தலைமறைவாக இருந்த எம்.எல்.ஏ அசாமில் கைது
மேகாலாயாவில் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட சுயேட்சை எம்.எல்.ஏ. அசாம் மாநிலத்தில் இன்று கைது செய்யப்பட்டார்.
கவுகாத்தி: மேகாலாயா மாநிலத்தில் கடந்த மாதம், மூத்த காங்கிரஸ் தலைவரும் அம்மாநில உள்துறை அமைச்சருமான லிங்டோ என்பவரின் மகனுக்கு சொந்தமான சொகுசு இல்லத்தில் 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டார்.
இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், இதில் தொடர்புடைய அமைச்சரின் மகன் 4 பெண்கள் உள்பட எட்டுபேரை கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமி, தன்னை சீரழித்ததாக சில நபர்களின் பெயர்களை போலீசாரிடம் கூறியுள்ளார். அதன் அடிப்படையில் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அம்மாநில சுயேட்சை எம்.எல்.ஏ ஜூலியஸ் தோர்பங்க் என்பவரை மாநிலத்தின் பல பகுதிகளில் போலீசார் தனிப்படை அமைத்து, வலை வீசி தேடி வந்தனர்.
மேலும் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் ஜூலியஸ் தோர்பங் அசாம் மாநிலம் கவுகாத்தியில் தலைமறைவாக பதுங்கியுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அசாம் மாநிலத்துக்கு விரைந்த போலீஸ் தனிப்படையினர், அங்கு ரகசிய இடத்தில் பதுங்கியிருந்த ஜுலியஸ் தோர்பங்கை கைது செய்தனர்.
தற்போது கைதாகியுள்ள சுயேட்சை எம்.எல்.ஏ ஜூலியஸ் தோர்பங், இதற்கு முன்னர் ஆயுதம் தாங்கிய தீவிரவாத அமைப்பின் துணை அமைப்பாளராக இருந்து, கடந்த 2007ஆம் ஆண்டு அரசிடம் சரணடைந்தார். அவருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்ட பிறகு, தேர்தலில் போட்டியிட்டு சுயேட்சை எம்எல்ஏ ஆனது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications