சிஏஏ, 370 நீக்கம்.. பாஜகவின் “அரசியல் அஜண்டா”வுக்கு உதவியவர் ராம்நாத் கோவிந்த் - மெகபூபா முப்தி
காஷ்மீர்: ஓய்வுபெற்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அரசியலமைப்பை விலையாக கொடுத்து பாஜகவின் அரசியல் நோக்கங்களை செயல்படுத்த உதவியவர் என ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி குற்றம்சாட்டியுள்ளார்.
நாட்டின் 14 வது குடியரசுத் தலைவராக இருந்த ராம்நாத் கோவிந்தின் பதவிகாலம் நேற்றுடன் நிறைவடைந்தது.
இதனை தொடர்ந்து இந்தியாவின் 15 வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த 18 ஆம் தேதி நடைபெற்றது.

ராம்நாத் கோவிந்த் ஓய்வு
இதில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட திரௌபதி முர்மு வெற்றி பெற்று இன்று குடியரசுத் தலைவராக பதவியேற்றார். ராம்நாத் கோவிந்த் பதவிகாலம் நேற்றுடன் நிறைவடைந்ததை அடுத்து அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றிவிட்டு ஓய்வு பெற்றார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஓய்வுபெறும் நிலையில் நாடாளுமன்றத்தில் உள்ள மைய மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை அவருக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது.

பிரிவு உபசார விழா
இந்த பிரிவு உபசார விழாவில் பிரதமர் நரேந்திர மோடி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு இரவு விருந்தையும் அளித்தார். இதில், ராம்நாத் கோவிந்த், அவரது மனைவி சவிதா கோவிந்த், நாளை குடியரசுத் தலைவராக பதவியேற்க இருக்கும் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பல மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பத்ம ஸ்ரீ விருது பெற்றவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

மெகபூபா முஃப்தி
இந்த நிலையில் ஓய்வுபெற்ற முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முஃப்தி விமர்சித்து உள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு சட்டம் 370 நீக்கம், நாட்டில் சிறுபான்மையினர்கள் மற்றும் தலித் மக்கள் குறிவைக்கப்படுவதாக சுட்டிக்காட்டி ராம்நாத் கோவிந்தை அவர் விமர்சித்தார்.

பாஜகவின் அஜெண்டா
குடியரசுத் தலைவராக இருந்த ராம்நாத் கோவிந்த் பாரதிய ஜனதா கட்சியின் அரசியல் கொள்கைகளை நிறைவேற்றுவதற்காக இந்திய அரசியலமைப்பை விலையாக கொடுத்து இருக்கிறார். ஓய்வுபெற்ற குடியரசுத் தலைவர் இந்திய அரசியலமைப்பை பல முறை நசுக்கிய பாரம்பரியத்தை விட்டுச் செல்கிறார்." என்று அவர் விமர்சனம் செய்து இருக்கிறார்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications