ஜம்மு காஷ்மீரில் பரபரப்பு! பூத் ஏஜெண்டுகள் கைது.. தரையில் அமர்ந்து போராடி வரும் மெகபூபா முப்தி!
ஸ்ரீநகர்: லோக்சபா தேர்தலின் 6ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், தனது ஆதரவாளர்களையும், தேர்தல் முகவர்களையும் கைது செய்துள்ளதாக கூறி ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சரும், மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவருமான மெகபூபா முப்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டை போல இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக 22 மாநிலங்களில் ஏப்ரல் 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ம் தேதியும், 94 தொகுதிகளுக்கு மூன்றாம் கட்டமாக மே 7ம் தேதியும், 96 தொகுதிகளுக்கு 4ம் கட்டமாக மே 13ம் தேதியும் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது.

கடைசியாக பீகார் 5 தொகுதிகள், ஜம்மு காஷ்மீர் 1, ஜார்க்கண்ட் 3, லடாக் 1, மகாராஷ்டிரா 13, ஒடிசா 5, உ.பி. 14, மேற்கு வங்கம் 7 என 6 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளுக்கு 5ம் கட்டமாக மே 20ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதனை தொடர்ந்து 6ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியுள்ளது.
7 மாநிலங்களில், 58 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மாநில வாரியாக பார்த்தால், பீகாரில் வால்மீகி நகர், பஸ்சிம் சம்பரன், பூர்வி சம்பாரண், ஷியோஹர், வைஷாலி, கோபால்கஞ்ச், சிவன், மகாராஜ்கஞ்ச் என 8 தொகுதிகளுக்கும், ஹரியானாவில் அம்பாலா, குருக்ஷேத்ரா, சிர்சா, ஹிசார், கர்னால், சோனிபட், ரோஹ்தக், பிவானி-மகேந்திரகர், குர்கான், ஃபரிதாபாத் என 10 தொகுதிகளுக்கும்,
ஜார்கண்ட்டில் கிரிதிஹ், தன்பாத், ராஞ்சி, ஜாம்ஷெட்பூர் என 4 தொகுதிகளுக்கும், ஒடிசாவில் சம்பல்பூர், கியோஞ்சர், தேன்கனல், கட்டாக், பூரி, புவனேஸ்வர் என 6 தொகுதிகளுக்கும், உத்தரப் பிரதேசத்தில் சுல்தான்பூர், பிரதாப்கர், புல்பூர், அலகாபாத், அம்பேத்கர் நகர், ஷ்ரவஸ்தி, டோமரியகஞ்ச், பஸ்தி, சந்த் கபீர் நகர், லால்கஞ்ச், அஸம்கர், ஜான்பூர், மச்லிஷாஹர், பதோஹி என 14 தொகுதிகளுக்கும்
மேற்கு வங்கத்தில் தம்லுக், காந்தி, கட்டல், ஜார்கிராம், மேதினிபூர், புருலியா, பாங்குரா, பிஷ்ணுபூர் என 8 தொகுதிகளுக்கும், டெல்லியில் சாந்தினி சௌக், வடகிழக்கு டெல்லி, கிழக்கு டெல்லி, புது டெல்லி, வடமேற்கு டெல்லி, மேற்கு டெல்லி, தெற்கு டெல்லி என 7 தொகுகளுக்கும், ஜம்மு காஷ்மீரில் அனந்த்நாக்-ரஜௌரி தொகுதிக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது. 58 லோக்சபா தொகுதிகளில் மொத்தம் 889 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் பிஜ்பெஹாரா பகுதியில் ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சரும், மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவருமான மெகபூபா முப்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தனது ஆதரவாளர்களையும், தேர்தல் முகவர்களையும் போலீசார் கைது செய்துள்ளதாக கூறி முப்தி போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் ரஜௌரி லோக்சபா தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த தொகுதியில் முப்தி வேட்பாளராக களமிறங்கியுள்ளார். சில மணி நேரங்களாக தனது மொபைலிலிருந்து யாருக்கும் அழைப்பு போகவில்லை என்றும், இது காவல்துறையினர் திட்டமிட்டு செய்திருக்கிறார்கள் எனவும் முப்தி குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னதாக இது குறித்து நேற்று தேர்தல் ஆணையத்திற்கு முப்தி கடிதம் எழுதியிருந்தார். அதில், “தேர்லுக்கு முன்னர் எங்கள் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்கள், கட்சியின் தொண்டர்கள் அதிக அளவில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். எஸ்எஸ்பி அனந்த்நாக் மற்றும் தெற்கு காஷ்மீர் டிஐஜியின் உத்தரவின் பேரில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவர்கள் ஓட்டு போடக்கூடாது என்றுதான் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். எனவேதான் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. இந்த விஷயத்தில் ஆணையம் உரிய நேரத்தில் தலையிடும் என்று நம்புகிறோம்” என்று கூறியுள்ளார். இதனையடுத்து தான் இன்று போராட்டத்தில் இறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications