"நாட்டை மீண்டும் பிரிப்பது மட்டுமே.. பாஜகவின் ஒரே நோக்கம்.." வெளுத்து வாங்கிய மெகபூபா முப்தி
ஜம்மு: தனது கட்சி நிர்வாகிகளிடம் பேசிய ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முஃப்தி, பாஜகவைக் கடுமையாகச் சாடி பேசினார்.
மத்திய அரசு காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்பு அந்தஸ்தை வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ கடந்த 2019இல் ரத்து செய்தது. மேலும், காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது.
அதன் பின்னர் ஆளுநரே அங்கு அனைத்து நடவடிக்கைகளையும் கவனித்து வந்தார். இதனால் 2 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு எந்தவொரு அரசியல் நடவடிக்கைகளும் இல்லாமல் இருந்து வருகிறது.

மெகபூபா முஃப்தி
இதற்கிடையே மத்திய அரசு விரைவில் தேர்தலை நடத்தத் திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முஃப்தி கட்சி நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசினார். அப்போது மெகபூபா முஃப்தி பேசுகையில், "மத அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்துவதன் மூலம் நாட்டை மற்றொரு பிளவை நோக்கி பாஜக தள்ளுகிறது. முகமது அலி ஜின்னா கடந்த காலத்தில் இந்த நாட்டைப் பிரித்தார், ஆனால் இன்று நாட்டை மீண்டும் வகுப்புவாத அடிப்படையில் பிரிக்க ஒவ்வொரு முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர்களுக்கு மற்றொரு பிரிவினை வேண்டும் போல.

கோட்சே
தேசப்பிதா மகாத்மா காந்தி, நாது ராம் கோட்சேவால் கொல்லப்பட்டார். இன்று அதே கோட்சேவை பின்பற்றும் நூற்றுக்கணக்கான மக்கள் கோட்சே கொள்கைகளைப் பின்பற்றி வருகின்றனர். அவர்களை வீழ்த்த மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். இந்த மதப் பிரிவினையை நாம் அனுமதித்தால், பகத்சிங் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகம் வீண் போய்விடும். எனவே, காந்தியை மீண்டும் ஒருமுறை கொல்ல அனுமதிக்காதீர்கள். காந்தியை மீண்டும் கொல்ல அனுமதிக்கும் கட்சி எங்களுடையது இல்லை.

வகுப்புவாத சக்திகள்
காஷ்மீரில் பாஜகவுக்கு நிச்சயம் எந்தவொரு இடமும் கிடைக்காது. ஜம்முவில் "வகுப்புவாத சக்திகளை" எதிர்த்துப் போராட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஜம்மு அனைத்து மத நம்பிக்கைகளின் தாயகமாக உள்ளது. பல்வேறு மதங்களைப் பின்பற்றும் மக்களை ஜம்மு மற்றும் காஷ்மீர் அப்படியே ஏற்றுக்கொண்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீர் அதிகபட்ச பாதிப்பை எதிர்கொள்கிறது. வணிகம் மற்றும் பொருளாதார ரீதியாக மட்டுமில்லை, ஜம்மு காஷ்மீர் மக்களின் கலாசார அடையாளமும் கூட ஆபத்தில் உள்ளது.

நேரு
தொடர்ந்து மோசமடைந்து வரும் சூழ்நிலையால், யாரும் காஷ்மீருக்கு வரமாட்டார்கள். தொழிலதிபர்கள் முதலீடு செய்யவும் தயக்கம் காட்டுவார்கள். நாட்டின் விடுதலைக்காகச் சிறை சென்றவர் நேரு. அதன் பின்னரும் நாட்டை வளர்ச்சி மற்றும் செழுமையின் பாதையில் நேரு வழிநடத்தினார். மக்களுக்காகக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மருத்துவமனைகளை அவர் கட்டியுள்ளார். ஆனால், மக்களிடையே பிளவுகளை உருவாக்கி ஆட்சியைப் பிடிப்பது மட்டுமே இப்போது உள்ள ஆட்சியர்களின் ஒரே நோக்கமாக உள்ளது.

வேலையின்மை
இளைஞர்களிடையே அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்க பாஜக அரசிடம் எந்த திட்டமும் இல்லை. அவர்கள் நாட்டை நாசமாக்கிவிட்டார்கள். ஜம்மு காஷ்மீரில் அவர்கள் மோசமான விஷயங்களைச் செய்துள்ளனர். இதனால் நாட்டின் மற்ற பகுதிகளை விடக் காஷ்மீரில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. ஜம்மு-காஷ்மீரின் இருப்புக்குக் கூட பாஜகவால் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

காஷ்மீர் அடையாளம்
காஷ்மீர் அடையாளம் மற்றும் கலாசாரத்தின் மீது பாஜக தாக்குதலைத் தொடங்கி உள்ளது. எனவே, அவர்களை எதிர்த்துத் தொடர்ந்து கேள்வி எழுப்ப வேண்டும். கட்சியை வலுப்படுத்த அனைத்து தொண்டர்களும் பணியாற்ற வேண்டும். காஷ்மீர் மக்களை பிளவுபடுத்தும் தீய சக்திகளைக் காஷ்மீர் மக்கள் நிராகரிக்க வேண்டும். பாஜகவை எதிர்த்து எங்களால் மட்டும் தனித்துப் போராட முடியாது. இளைஞர்களுக்கு இதில் முக்கிய பங்கு உண்டு. அவர்கள் எங்களுடன் கைகோர்த்துப் போராட வேண்டும்" என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications