போதையை கொடுத்து இளம்பெண் பலாத்காரம்- வீடியோ எடுத்து நெட்டில் போட்ட கயவர்கள்

உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் திருமணமான பெண்ணை பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வைரலாக்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட அந்த பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

ஷாஜகான்பூர்: உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. திருமணமான இளம் பெண்ணை போதைப்பொருள் கொடுத்து சுயநினைவு இல்லாத நிலையில் பலாத்காரம் செய்த கயவர்கள் அதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வைரலாக்கியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளிக்கவே, ஷாஜகான்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Men molest in UP video viral on Social media

கடந்த இரு தினங்களுக்கு முன்பு இளம்பெண்ணுடன் 2 இளைஞர்கள் உல்லாசமாக இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. மிர்ஷாபூர் காவல் நிலையத்தில் தனது கணவனுடன் வந்த பெண், தன்னை இரண்டு பேர் போதையை கொடுத்து சுயநினைவு இல்லாத நிலையில் பலாத்காரம் செய்து விட்டதாகவும் அதனை வீடியோ எடுத்து வைரல் செய்து வருவதாகவும் புகார் கூறினார்.

கடந்த ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி நள்ளிரவில் தனது கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் வந்த இருவர் தன்னை பலாத்காரம் செய்ததாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டுக்கு ஆளான நபர்பளின் பெயர் நீலேஷ், ஷியாம் என்பதாகும். இருவரும் இளம்பெண்களுடன் உல்லாசம் அனுபவிப்பது அதை ஆபாச படங்களில் வருவது போல அதனை வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளனர். அதேபோலவே மிர்ஷாபூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணையும் பலாத்காரம் செய்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றி வைரலாக்கியுள்ளனர். இதனையடுத்தே பாதிக்கப்பட்ட அந்த பெண் தனது கணவருடன் சென்று புகார் அளித்துள்ளார். இதனையடுத்து வீடியோவை ஆய்வு செய்த ஷாஜகான்பூர் எஸ்பி குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+