மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம் செய்து கொலை: சமூக ஆர்வலர்கள் கண்டனம்
சண்டிகர்: ஹரியானாவில் மனநலம் பாதிக்கப்பட்ட நேபாளப் பெண் பலாத்காரம் செய்து கொன்று வீசிய மர்மநபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மோடி அரசு பலாத்கார குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஹரியானா மாநிலத்தில் உள்ள ரொஹட்டக் கிராமத்தில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த பல குடும்பங்கள் வசித்து வருகின்றன. நேபாளத்தைச் சேர்ந்த குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த 4ஆம் தேதி முதல் அந்த குடும்பத்தில் இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணைக் காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்டது.

இது குறித்து துப்பு துலக்கிய போலீசார், முட்புதர் நிறைந்த பகுதியில் இருந்து அந்த பெண்ணின் சடலத்தை மீட்டனர்.
மனநலம் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மர்மநபர்கள், அந்த பெண்ணின் உடலை துண்டு துண்டாக வெட்டி வீசி உள்ளது. இவற்றில் முக்கிய உடல் பாகங்கள் பலவற்றை காணவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட பெண், கடந்த சில மாதங்களுக்கு முன் தனது சகோதரியுடன் நேபாளத்தில் இருந்து வந்து அரியானாவில் குடியேறி உள்ளார் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள அப்பெண்ணின் உடல்கூறுகள் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகளை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொடுமையான குற்றத்தை செய்த நபர்களைப் பற்றி தகவல்களை தெரிவிப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் அளிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே சமூக ஆர்வலர்கள் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். பர்லா சுக்ரா கூறும் போது, பெண்களுக்கு எதிரான இதுபோன்ற கொடுமைகள் அடிக்கடி அந்த கிராமத்தில் அரங்கேறி வருவதாக கூறியுள்ளார்.
வெளிமாநிலங்களைச் சேர்ந்த பெண்களே இதுபோன்ற கொடுமைக்கு ஆளாகி வருவதாகவும், இந்த குற்றங்களைடத தடுக்க கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாஜக அரசு
இதனிடையே சமூக ஆர்வலர் அன்னி ராஜா, பாஜக அரசை கடுமையாக சாடியுள்ளார். பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க இதுவரை எந்த வித நடவடிக்கையையும் பாஜக அரசு செயல்படுத்தவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications