Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திடீர் மர்ம சத்தம்.. 2 கிமீ தூரத்துக்கு காதை பிளந்த சவுண்ட்.. அலறிஓடிய மக்கள்.. ராஜஸ்தானில் பரபரப்பு

வானத்தில் இருந்து விண்கல் விழுந்ததால் மக்கள் அலறி அடித்து கொண்டு ஓடினர்

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: திடீர் மர்ம சத்தம்.. 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு அந்த சத்தம் கேட்டது.. அந்த நேரத்தில் தொப்பென்று ஒரு பொருள் வானத்தில் இருந்து விழுந்ததும் அலறி அடித்து கொண்டு மக்கள் ஓடி உள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் சஞ்சோர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. திடீரென பலத்த வெடிச்சத்தம் போல முதலில் கேட்டுள்ளது. அதற்கு பிறகு விண்கல் போன்ற ஒன்று வானத்தில் இருந்து விழுந்தது.

 meteorite like object falls from sky in rajasthan, public panic

அதை பார்த்ததுமே மக்கள் தலைதறிக்க ஓடினர்.. "அந்த மர்ம பொருள் பார்க்கவே பயமா இருந்தது.. அந்த சத்தம் 2கிமீ தூரத்துக்கு கேட்டது.. அது விழுந்த இடத்தில் 2 அடிக்கு ஆழமான பள்ளம் விழுந்துடுச்சு" என்று அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக போலீசுக்கும் தகவல் சொல்லி உள்ளனர்.. அவர்கள் விரைந்து வந்து அந்த பொருளை ஆய்வு செய்துள்ளனர்.. முதலில் அந்த பொருள் ரொம்ப சூடாக இருந்திருக்கிறது.. அதனால் யாருமே கிட்ட போகவில்லை.. அதில் உள்ள வெப்பம் குறைந்த பின்னரே அதை மீட்டு சென்றிருக்கிறார்கள்.

அந்த பொருளின் எடை 2.78 கிலோ இருக்கும் என்கிறார்கள் போலீசார்.. மர்ம பொருள் விழுந்த பக்கத்திலேயே ஒரு நகைக்கடை உள்ளதாம். அந்த நகைக்கடைக்கு சொந்தமான லேப்-பில்தான் அந்த மர்ம கல்லை சோதனை செய்திருக்கிறார்கள்.

ஜெர்மானியம், பிளாட்டினியம், நிக்கல், இரும்பு என மொத்தமும் அந்த பொருளில் அடங்கி இருப்பது தெரியவந்துள்ளது.. எனினும் அடுத்தக்கட்ட சோதனைக்காக ஜெய்பூரில் உள்ள புவியியல் தொடர்பான ஆய்வகத்திற்கு அந்தபொருளை அனுப்பி வைக்க போகிறார்கள்.

பலத்த சத்தத்துடன் வானத்திலிருந்து விழுந்த மர்ம பொருளினால் மக்கள் இன்னமும் அச்சத்தில் உள்ளனர்... மேலும் அந்த பொருளில் இருந்து வெப்பம் அளவுக்கு அதிகமாக வெளியேறியதால் அந்த பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+