ஆம் ஆத்மியில் மில்கா சிங்கின் மனைவி, மகள்... ஆனால் மில்கா சேரவில்லை

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: முன்னாள் தடகள சாதனை வீரர் மில்கா சி்கின் மனைவி நிர்மல் கெளர் மற்றும் அமெரிக்காவில் வசித்து வரும் அவரது மகள் மோனா சிங் ஆகியோர் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளனர்.

ஆனால் தனக்கும் அரசியலுக்கும் தூரம், எனவே அரசியல் வேண்டாம் என்று மில்கா சிங் தெரிவித்துள்ளார்.

நிர்மல் கெளரும் ஒரு முன்னாள் விளையாட்டு வீராங்கனைதான். அவரும், அவரது மகளும் கெஜ்ரிவால் கட்சியில் விண்ணப்பித்து உறுப்பினராகி கட்சியில் இணைந்துள்ளனர். தனது மனைவி, மகளின் முடிவை தான் மதிப்பதாக மில்கா சிங் தெரிவித்துள்ளார்.

Milkha Singh's wife, daughter join AAP, but he says no to politics

அவர்கள் சேர்ந்து விட்டனர்

இதுகுறித்து மில்கா சிங் கூறுகையில், உண்மைதான், எனது மனைவியும், மகளும் ஆம் ஆத்மியில் சேர்ந்துள்லனர். கெஜ்ரிவாலின் செயல்பாடுகள், போராட்டங்கள், லட்சியம் தங்களுக்குப் பிடித்திருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அதை நான் மதிக்கிறேன்.

எனக்கு அரசியல் வேண்டாம்

எனக்கு அரசியல் வேண்டாம். அதற்கும் எனக்கும் ரொம்ப தூரம். நான் சேரும் திட்டம் இல்லை.

நேரு காலத்திலேயே சேர்ந்திருப்பேன்

எனக்கு ஆசை இருந்திருந்தால் இப்போது அல்ல நேரு, இந்திரா காந்தி காலத்திலேயே சேர்ந்திருப்பேன்.

விலகியிருக்கவே விரும்புகிறேன்

நான் அரசியலிலிருந்து விலகியிருக்கவே விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் மில்கா சிங்.

3 முறை ஒலிம்பிக்கில் பங்கேற்ற சாதனையாளர்

மில்கா சிங், பறக்கும் சீக்கியர் என்ற பட்டப் பெயர் கொண்டவர். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நான்கு தங்கப் பதக்கம் வென்றவர். 3 முறை ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டவர். இவரது மகள் மோனா சிங், டாக்டர் ஆவார், அமெரிக்காவில் வசித்து வருகிறார். அடிக்கடி இந்தியா வருவார்.

சச்சினை அமைச்சராக்க மில்கா விருப்பம்

அரசியலில் விருப்பம் என்று கூறியபோதிலும் அரசியல் பேசத் தவறவில்லை மில்கா. சச்சின் டெண்டுல்கர், பி.டி. உஷா போன்றோருக்கு நல்ல பதவி தர வேண்டும் என்று கூறியுள்ளார். சச்சினை விளையாட்டு அமைச்சராக்க வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்துள்ளார்.

அதில் என்ன தவறு

இதுகுறித்து மில்கா கூறுகையில், சச்சின், உஷா போன்றோருக்கு அமைச்சர், ஆளுநர் பதவி தரலாம். தூதர்களாக நியமிக்கலாம். அதில் என்ன தவறு... அப்படிச் செய்தால் இளம் வீரர்களுக்கு பெரும் உந்துதலாக அமையும் என்றார் மில்கா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+