நடிகர் அம்பரீசுக்கு திடீர் மூச்சு திணறல்.. பெங்களூர் மருத்துவமனையில் அனுமதி!
பெங்களூர்: நடிகரும், கர்நாடக அமைச்சருமான அம்பரீஷ் மூச்சு திணறல் காரணமாக பெங்களூரிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கன்னட நடிகரும், தற்போதைய சித்தராமையா அமைச்சரவையில் வீட்டுவசதி அமைச்சருமாக பதவி வகிப்பவருமான அம்பரீஷ் கடந்த ஆண்டு திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.

பெங்களூரிலுள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் அவரது மூச்சு திணறல் பிரச்சினை சரியாகாததால், கவலையில் இருந்த அவரது குடும்பத்தாருக்கு, நடிகர் ரஜினிகாந்த் அபயம் கொடுத்தார்.
ரஜினிகாந்த், உடல் நலக்குறைவால் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்ற மவுண்ட் எலிசபெத், மருத்துவமனையை பரிந்துரைத்து அம்பரீஷை அங்கு சிகிச்சைக்கு சேர்க்குமாறு அறிவுறுத்தினார். ரஜினி அறிவுரையை ஏற்ற அம்பரீஷ் மனைவியான நடிகை சுமலதா, சிங்கப்பூரில் ரஜினி சிகிச்சை பெற்ற மருத்துவமனைக்கு அம்பரீஷை அழைத்து சென்று சிகிச்சையளித்தார்.
சிகிச்சை நல்லபடியாக நடந்து அம்பரீஷ் நலமுடன் வீடு திரும்பினார். வழக்கம்போல அமைச்சர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு அம்பரீஷ் மீண்டும் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டார். அவர், விக்ரம் என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். சுமலதா உடனிருந்து கவனித்து வருகிறார்.
இருப்பினும் அம்பரீஷ் உடல்நிலை சீராக இருப்பதாகவும், ரசிகர்கள் கவலையடைய வேண்டாம் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications