உ.பி.யில் அமைச்சர் கார் மோதி 5 வயது சிறுவன் பலி.. காரை நிறுத்தாமலே சென்ற கொடுமை
உத்திரபிரதேசத்தில் அமைச்சரின் கார் மோதியதில் சிறுவன் பலியான சம்பவத்தை விசாரிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
லக்னோ : உத்திரபிரதேசத்தில் அமைச்சரின் கார் மோதியதில் ஐந்து வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மேல் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் முதல்வர் யோகி ஆதித்யநாத்.
உத்திரபிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் நேற்று சாலையில் ஓரத்தில் நடந்து சென்ற சிறுவன் மீது மோதியதில் அந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே பலியானான். ஆனால், மோதிய அமைச்சரின் கார் நிற்காமல் சென்றுவிட்டது. இது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரசு விழாவிற்கு சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தார் அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பார். அவரின் கார் சாலையில் நடந்து சென்ற ஐந்து வயது சிறுவன் சிவா மீது மோதியது. ஆனால் காலை நிறுத்தி அமைச்சர் சிறுவனின் நிலை குறித்து பார்க்கவில்லை. இதைக் கண்டித்து சிறுவனின் உடலோடு அந்தப் பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த முதல்வர் யோகி ஆதித்யநாத், அந்த குடும்பத்திற்கு ஐந்து லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கவும், இந்த விபத்து குறித்து மேல் விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications