அரக்கர்கள் கூட்டம் – மும்பையில் 15 வயது சிறுமி பலாத்காரம்
மும்பை: டெல்லி்யில் உபேர் கால் டாக்சியில் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சியிலிருந்து நாடு இன்னும் மீளாமல் உள்ள நிலையில் மும்பையில் 15 வயது சிறுமி சிலரால் பாலியல் பலாத்காரம் செய்யபப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது.
வடக்கு டெல்லியில் உபேர் கால் டாக்சியில் பயணித்த ஒரு பெண்ணை, அந்த டாக்சியின் டிரைவரான சிவக்குமார்யாதவ் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்த செயல் நாட்டை அதிர வைத்துள்ளது. அந்த டிரைவர் ஏற்கனவே ஒரு பெண் பயணியை பலாத்காரம் செய்ததும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து டெல்லியில் உபேர் டாக்சியின் சேவைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. யாதவ் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், மும்பையில், ஒரு 15 வயது சிறுமியை சில அடையாளம் தெரியாத நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்த செயல் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நல சோபரா என்ற இடத்தில் சில அடையாளம் தெரியாத நபர்கள் 15 வயது சிறுமியை கேங்ரேப் செய்துள்ளனர். எத்தனை பேர் என்பது தெரியவில்லை.
நல சோபரா பகுதியில் உள்ள கட்டடத்தில் வைத்து இதைச் செய்துள்ளனர் அந்த கொடூரர்கள். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை 2 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications