நண்பனை நம்பி போன சிறுமி... 5 பேருக்கு விருந்தாக்கிய கொடூரன் - ஆந்திராவில் பயங்கரம்
ஆந்திராவில் 16 வயது சிறுமியை ஆறு பேர் கொண்ட கும்பல் கூட்டாக பலாத்காரம் செய்துள்ளனர். ஐந்து நாட்கள் அறைக்குள் பூட்டி வைத்து சீரழித்த சம்பவம் ஆந்திராவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஓங்கோல்: ஆந்திரா மாநிலத்தில் பலாத்கார சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்து வருகிறது. 16 வயது சிறுமியை ஆறு பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்துள்ளனர். நண்பனை நம்பி வீட்டுக்குப் போன சிறுமியை ஐந்து நாட்கள் அறைக்குள் பூட்டி வைத்து சீரழித்துள்ளனர். அவனது நண்பர்களுக்கும் விருந்தாக்கியுள்ளான் இந்த சம்பவம் ஆந்திராவையே அலற வைத்துள்ளது.
ஓங்கோல் மாவட்டத்தில் இந்த கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. பெண்களின் பாதுகாப்புக்கு சவால் விட்ட இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் எம் சுசித்திரா கூறியுள்ளார். இந்த படுபாதக சம்பவத்தைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை விடப்போவதில்லை என்றும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

ஆர்டிசி பேருந்து நிலையத்தில் ஜூன் 17ஆம் தேதியன்று பேருந்துக்காக அந்த சிறுமி காத்துக்கொண்டிருந்தார். நடந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரகாசம் மாவட்ட எஸ்பி சித்தார்த் கவுசல், பலாத்காரம் செய்த குற்றவாளிகளில் ஒருவன் அந்த சிறுமியின் நண்பன், கடந்த 17ஆம் தேதியன்று அந்த சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச்சென்ற அந்த சிறுவன், அங்கிருந்த தனது 5 நண்பர்களுக்கு விருந்தாக்கியுள்ளான்.
அந்த ஆறு கயவர்களும் ஐந்து நாட்கள் அறைக்குள் அடைத்து வைத்து சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிய அந்த சிறுமி சனிக்கிழமையன்று போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார். அந்த சிறுமியை உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அந்த சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுமி அளித்த புகாரின் பேரில் போலீசார் குற்றவாளிகளைத் தேடி வந்தனர். அதில் ஒருவனை நெல்லூரில் உள்ள பிட்ரகுண்டாவில் போலீசார் கைது செய்தனர்.
பலாத்கார குற்றவாளிகள் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஆந்திர அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. ஓங்கோல் எம்எல்ஏவும், அமைச்சருமான பாலினெனி சீனிவாச ரெட்டி இந்த சம்பவம் குறித்து கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மாநில டிஜிபி கவுதம் சேவாக், பெண்களின் பாதுகாப்பு குழந்தைகளின் பாதுகாப்புக்கு மிகவும் முக்கியத்துவம் தருவோம் என்றும் கூறியுள்ளார். குற்றவாளிகளை கைது செய்து கடுமையான தண்டனை பெற்றுத்தருவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications