புதிதாக திருமணமான பெண் இரு நபர்களால் பலாத்காரம்
ராஜமுந்திரி: சிறுமி மற்றும் புதிதாக திருமணமான பெண் ஆகியோர் பாலியல் பலாத்காரத்துக்கு உற்படுத்தப்பட்ட சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜமுந்திரி பகுதியிலுள்ள தொரேடு கிராமத்தில் தோட்ட வேலை செய்யும் 10 வயது சிறுமி சம்பவத்தன்று கடையில் தயிர் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தபோது, வேணு என்ற 25 வயது இளைஞரால் பலாத்காரம் செய்யப்பட்டார். சைக்கிளில் தூக்கி வைத்து ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு கொண்டு சென்று சிறுமியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
வீட்டுக்கு வந்த சிறுமி நடந்த சம்பவத்தை கூறி அழுதுள்ளார். இதையடுத்து, அவரது பெற்றோர், ராஜநகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
மற்றொரு சம்பவத்தில் புதிதாக திருமணமான பெண் ஆட்டோ டிரைவர் மற்றும் அவரது நண்பரால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். ராஜநகரம் காவல் நிலைய பகுதியில் உள்ள லாலா சேர்வு பகுதியை சேர்ந்த பெண் இந்த கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டவராகும்.
இவருக்கு சமீபத்தில்தான் திருமணமானது. கணவனுடன் ஏற்பட்ட தகராறால் இன்று அதிகாலையில் வீட்டைவிட்டு கிளம்பி, உள்ளூர் ரயில் நிலையத்துக்கு வந்துள்ளார். அங்குள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோவை வாடகைக்கு அமர்த்தி தனது தாய் வீட்டுக்கு போகும்படி கூறியுள்ளார்.
குடிபோதையில் இருந்த ஆட்டோ டிரைவர் ஆளில்லா இடத்துக்கு அழைத்துச் சென்று தனது நண்பன் ஒருவருடன் சேர்ந்து இப்பெண்ணை கூட்டு வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளார். இரு சம்பவங்களுமே ஆந்திராவின் ஒரே காவல் நிலைய எல்லையில் நடந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications