உலக அழகியோட ஜாதி என்ன... கோலிவுட்ல குத்தாட்டம் போடுவாங்களா... கூகுளை திணறடித்த நெட்டிசன்ஸ்
உலக அழகி பட்டம் வென்று இருக்கும் மனுஷி சில்லர் குறித்து பலர் கூகுளின் வித்தியாசமான பல கேள்விகளை கேட்டு உள்ளனர்.
சண்டிகர்: ஹரியானா மாநிலத்தை சேர்ந்த மனுஷி சில்லார் 2017ம் ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தை பெற்றுளளார். ஏறத்தாழ 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பெண் ஒருவர் இந்தப் பட்டத்தை பெற்றுள்ளார்.
டாக்டர் படிக்கும் பெண்ணான இவர் பல விஷயங்களில் மிகவும் திறமைசாலி ஆவார். 108 பேர் கலந்து கொண்ட உலக அழகி போட்டியில் இதில் இவர் தனி ஆளாக பட்டம் வென்று இருக்கிறார்.
இந்த நிலையில் இவர் குறித்த கூகுளின் பலரும் வித்தியாசமான தேடல்களை செய்து உள்ளனர். இதில் முக்கியமாக மனுஷி சில்லார் ஜாதி என்ன என்று பலர் கூகுளில் கேட்டு உள்ளனர்.

போட்டோ எங்க பாஸ்
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வாங்கிய அடுத்த நொடி அனைவரும் அவரது போட்டோவைதான் தேடி இருக்கின்றனர். கூகுள் இமேஜ் சர்ச்சில் நேற்று இதுதான் அதிகமாக தேடப்பட்டு இருக்கிறது. பொதுவாக ஆசியாவில் அதிகமாக தேடப்படும் பெண் பிரபலம் சன்னி லியோனாகத்தான் இருந்தார். ஆனால் அவரை ஒரே நாளில் தூக்கி சாப்பிட்டு இருக்கிறார் மனுஷி சில்லார். இன்றும் பலர் அவரது புகைப்படத்தை தேடி வருகின்றனர்.
கோலிவுட் பங்கம் வருவார்களா
நிறைய திறமைகள் கொண்ட இவர் கண்டிப்பாக பாலிவுட்டில் நடிப்பார் என்று கூறுகிறார்கள். ஆனால் அப்படியே கோலிவுட் பக்கமும் வந்தால் நன்றாக இருக்கும் என்று பலர் கேட்டு உள்ளனர். முக்கியமாக இயக்குனர் சங்கர் இவரை அறிமுகப்படுத்த வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்டுள்ளனர்.

எங்கே போனாலும் நானும் வருவேன்
இவர் ஒரே நாளில் இன்ஸ்டாகிராம் புயலாக மாறியிருக்கிறார். இந்தியாவில் இருக்கும் பல முன்னணி நடிகைகளை இவர் இன்ஸ்டாவில் முந்தி இருக்கிறார். ஒரே நாளில் பல லட்சம் பாலோயர்கள் இவருக்கு உருவாகி இருக்கிறார். இந்த வருடத்தில் அதிகம் தேடப்பட்ட இன்ஸ்டாகிராம் பக்கம் இதுதான் என்ற சிறப்பு அங்கிகாரத்தை இவரது பக்கம் பெற்று இருக்கிறது.

நம்ம ஆளுங்களா
இந்த நிலையில் நேற்று சிலர் இன்னொரு மோசமான தேடுதலையும் கூகுளில் நிகழ்த்தி உள்ளனர். அதன்படி அவர் உலகி அழகி ஆன மறுநொடி மனுஷி சில்லார் என்ன சாதி என்று தேடி உள்ளனர். இதுதான் நேற்று கூகுளில் முக்கிய இடம் பிடித்த தேடுதல் ஆகும். மேலும் இதனால் இந்தியர்களே இப்படித்தான் என்று வெளிநாட்டினர் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

எப்பவுமே இப்படித்தான்..இப்படித்தான் எப்பவுமே
இதேபோல் சென்ற வருடம் நடத்த ஒலிம்பிக் பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் இறுதி போட்டியில் பி.வி.சிந்து, உயிரை கொடுத்து ஆடிக்கொண்டிருந்த நேரத்தில், அவர் எந்த ஜாதிக்காரர் என இந்திய ரசிகர்கள் கூகுளில் தேடோ தேடு என தேடியுள்ளனர். ஒருவர் புகழ் பெறும்போது அவர் என்ன ஜாதி என்று அறிந்து கொள்ளும் மனநிலை இந்தியர்களுக்கு இயல்பாகவே வந்துவிடுவதாக பலர் வருத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications