குருவாயூர் : 29 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான சாமி நகைகள் கண்டுபிடிப்பு
குருவாயூர்: கேரளாவின் குருவாயூர் கோவிலில் இருந்து 29 ஆண்டுகளுக்கு மாயமான நவரத்தினமாலைகள் அங்குள்ள கிணற்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் உள்ள பிரசித்திப்பெற்ற கோவில்களில் குருவாயூர் கிருஷ்ணன் கோவிலும் ஒன்று. கடந்த 1985-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந்தேதி கோவில் மேல்சாந்தியாக இருந்த தாமோதரன் நம்பூதிரி மாற்றப்பட்டு கிருஷ்ணன் நம்பூதிரி பொறுப்பேற்றார். அப்போது கோவில் பொக்கிஷ அறையில் இருந்த நகைகளை சரிபார்த்த போது, 3 தங்க மாலைகள் மாயமாகி இருந்தது தெரிய வந்தது.
இது தொடர்பாக கோவில் நிர்வாகம் கோவில் பொறுப்பில் ஏற்கனவே இருந்த தாமோதரன் நம்பூதிரி, அவரது மகன் தேவதாஸ் நம்பூதிரி ஆகியோர் மீது போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து நம்பூதிரிகளிடம் விசாரணை நடத்தினர். இதில் மனம் உடைந்த தாமோதரன் நம்பூதிரி தற்கொலை செய்து கொண்டார்.
அப்போது கேரள மாநில முதல்வராக காங்கிரஸ் கட்சியின் கருணாகரன் இருந்தார். குருவாயூர் கோவிலில் நகை திருட்டுப் போன சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, 1987-ல் நடைபெற்ற தேர்தலிலும் முக்கியத்துவம் பெற்றது.
ஆனால் அதற்கு பிறகு இப்பிரச்சினை கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்து போனது. கோவில் நிர்வாகம் இது தொடர்பாக 'தேவ பிரசன்னம்' பார்த்தனர். அதில், கோவிலில் திருட்டுப் போன நகைகள் அங்குள்ள மணிக்கிணற்றில் உள்ளது என்று தெரிய வந்தது. ஆனால், கோவில் நிர்வாகத்தினர் மணிக்கிணற்றில் நகையை தேடும் முயற்சியில் ஈடுபடவில்லை.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவில் மணிக் கிணற்று நீர் மாசுப்பட்டு காணப்பட்டது. இதனால் கிணற்றை தூர் வார கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்தது. நேற்று இந்த பணிகள் தொடங்கி கிணற்றில் இருந்த சேறுகள் அகற்றப்பட்டது.
அப்போது சேற்றுடன் சேர்ந்த சுவாமியின் நவரத்தின மாலை வெளியே வந்தது. மேலும் தோண்டிய போது, இன்னொரு மாலையில் 15-க்கும் மேற்பட்ட தங்க கற்கள் சிக்கியது.
இதனை கோவிலின் பிரதான நகை ஆசாரி சோதித்து பார்த்து அது சுவாமியின் நகைதான் என்பதை உறுதி செய்தார். இதையடுத்து மீண்டும் கிணற்றை தோண்டும்பணி துரிதப்படுத்தப்பட்டது.
29 ஆண்டுகளுக்கு முன்னர் நகை காணாமல் போய் பரபரப்பு ஏற்பட்டது. இப்போது நகை மீண்டும் கிடைத்து புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications