ரயிலை காணோம் சாமி... பீகாரில் மாயமான ரயில் 17 நாட்கள் கழித்து கண்டுபிடிப்பு

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகார் மாநிலத்தில் 'காணாமல்போன' ரயில் ஒன்று 17 நாட்களுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பீகாரின் ஹிஜிபூர் அருகே கடந்த மாதம் 25ம் தேதி இரவு சரக்கு ரயில் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனையடுத்து அம்மார்க்கமாக சென்ற ரயில்கள் வேறு மார்க்கமாக அனுப்பிவிடப்பட்டன. அப்போது கோராக்பூர் - முசாபர்நகர் பயணிகள் ரயிலும் வேறுபாதைக்கு திருப்பப்பட்டது.

பயணிகள் இல்லை

பயணிகள் இல்லை

ரயில் வேறு மார்க்கமாக செல்வதாக தெரிந்ததும், அதில் பயணித்த பயணிகள் ரயிலில் இருந்து இறங்கிவிட்டனர். இதன்பிறகு ரயில் மட்டும் மாற்று பாதையில் பயணித்தது.

17 நாட்கள் மாயம்

17 நாட்கள் மாயம்

ஆனால் அதன்பிறகு ரயில் குறித்த எந்த தகவலும் இல்லை. எங்கே சென்றது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் 17 நாட்களுக்கு பிறகு ரயில் நிற்கும் இடத்தை ரயில்வே ஊழியர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

போலீசில் தெரிவிக்கவில்லை

போலீசில் தெரிவிக்கவில்லை

சமஸ்திபுர் மண்டல ரயில்வே மேலாளர் அருண் மாலிக், கூறுகையில், ரயில் காணாமல் போன பிறகு நாங்கள் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கவில்லை. 17 நாட்களுக்கு பிறகு மற்றொரு டிவிஷனில் ரயில் கண்டுபிடிக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

டிரைவருடன் தொடர்பு துண்டிப்பு

டிரைவருடன் தொடர்பு துண்டிப்பு

ரயிலை ஓட்டிச் சென்ற ஓட்டுநரையும் இத்தனை நாட்களாக ரயில்வேதுறையினரால் தொடர்பு செய்ய முடியாமல் இருந்ததாம். எனவே இந்த சம்பவத்தில் மர்மம் நீடிக்கிறது. ஒருவேளை டிரைவரே ரயிலை கடத்தியிருக்கலாமோ என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.

கிணற்றை காணோம் சாமி

கிணற்றை காணோம் சாமி

இந்த சம்பவத்தை பார்க்கும்போது கிணற்றை காணோம் என்று ஒரு திரைப்படத்தில் வரும் காமெடி சீனை நினைவுபடுத்துவதாக உள்ளது. இந்தியாவில்தான் இப்படியெல்லாம் நடக்கும்போலும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+