மிசோரம் சட்டசபை தேர்தல்:ராகுல் தீவிர பிரசாரம்- 39 வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்- அக்கப்போர் நஹி?
ஐஸ்வால்: மிசோரம் மாநில சட்டசபை தேர்தலுக்கான 39 வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
மிசோரம் மாநிலத்தில் மொத்தம் 40 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவம்பர் 7-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. அனைத்து வாக்குகளும் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

மிசோரம் மாநிலத்தில் ஆளும் மிசோ தேசிய முன்னணி, காங்கிரஸ், ஜோரம் மக்கள் இயக்கம் ஆகியவை இடையேதான் போட்டி. இம்மாநிலத்தில் பாஜகவும் போட்டியிடுகிறது. ஆம் ஆத்மியும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
மிசோரம் மாநிலத்தில் ஆட்சியை மீண்டும் கைப்பற்ற காங்கிரஸ் தீவிரம் காட்டுகிறது. மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்றும் நாளையும் மிசோரமில் தீவிர பிரசாரம் மேற்கொள்கிறார். மிசோரமில் பாதயாத்திரை மற்றும் பொதுக் கூட்டங்களில் பங்கேற்று பிரசாரம் செய்து வருகிறார் ராகுல் காந்தி.
இந்நிலையில் 40 தொகுதிகளில் 39 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் இன்று அறிவித்தது. மிசோரம் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் லால்சவ்தா ஐஸ்வால் மேற்கு-III தொகுதியில் போட்டியிடுகிறார்.
மற்றொரு மூத்த தலைவர் லால்னுன்மாவியா சுவாங்கோ ஐஸ்வால் வடக்கு-I (ST) தொகுதியில் போட்டியிடுகிறார்.
மிசோரம் மாநிலத்தின் 5 சிட்டிங் எம்.எல்.ஏக்களில் 4 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு தந்துள்ளது காங்கிரஸ். சிட்டிங் எம்.எல்.ஏ. கேடி ரோகாவுக்கு மட்டும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு தரவில்லை காங்கிரஸ்.
இந்த வேட்பாளர்கள் பட்டியலில் 2 பெண் வேட்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர்; சக்மா சமூகத்தை சேர்ந்த 2 பேரும் வேட்பாளர்களாக பட்டியலில் இணைந்துள்ளனர்.
மிசோரம் மாநிலத்தில் 2008 முதல் 2018 வரை காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. 2018 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. மிசோ தேசிய முன்னணி இம்மாநிலத்தில் ஆட்சி அமைத்தது.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications