மிசோரம்: 13 மையங்கள்.. 4,000 பேர்.. டிச.3-ல் திட்டமிட்டபடி வாக்கு எண்ணிக்கைக்கான ஜரூர் பணிகள்!
ஐஸ்வால்: மிசோரம் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை டிசம்பர் 3-ந் தேதி எண்ணும் பணிக்காக ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மிசோரம் வாக்கு எண்ணும் பணியில் 4,000 பேர் ஈடுபட உள்ளனர்.
மிசோரம் மாநிலத்தில் மொத்தம் 40 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 21 இடங்கள். மிசோரம் மாநிலத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 7-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது.

மிசோரம் மாநிலத்தில் ஆளும் மிசோ தேசிய முன்னணி, ஜோரம் மக்கள் இயக்கம் மற்றும் காங்கிரஸ் இடையே மிக கடும் போட்டி உள்ளது. இம்மாநிலத்தில் பாஜகவும் களத்தில் இருக்கிறது. மொத்தம் 174 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
மிசோரம் மாநில சட்டசபை தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகள் பெரும்பாலும் இம்மாநிலத்தில் தொங்கு சட்டசபை அமையக் கூடும் என கணித்துள்ளன. இருந்த போதும் மிசோரம் மாநிலத்தில் பாஜக இடம் பெறும் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்கின்றனர் அக்கட்சித் தலைவர்கள்.
இதனிடையே டிசம்பர் 3-ந் தேதி வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. மிசோரம் மாநிலத்தில் பெரும்பான்மையினர் கிறிஸ்தவர்கள். தங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை புனித நாள்; ஆகையால் ஞாயிற்றுக்கிழமை அதாவது டிசம்பர் 3-ல் வாக்கு எண்ணிக்கை நடத்தக் கூடாது; வேறு ஒரு தேதியில் வாக்குகளை எண்ண வேண்டும் என மிசோரம் மாநிலத்தில் அரசியல் கட்சிகள், கிறிஸ்தவ தேவாலய அமைப்புகள், என்.ஜி.ஓக்கள் வலியுறுத்தி உள்ளன.
ஆனால் இதனை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. மிசோரமில் வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. டிசம்பர் 3-ந் தேதி வாக்கு எண்ணிக்கை மொத்தம் 13 மையங்களில் நடைபெற உள்ளது. இந்த வாக்கு எண்ணும் பணியில் 4,000 பேர் ஈடுபட உள்ளனர். மொத்தம் 399 மின்னணு வாக்கு இயந்திர மேஜைகள், 56 தபால் வாக்கு மேஜைகள் அமைக்கப்படுகின்றன. 13 மையங்களின் 40 அறைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications