‘குங்கும பொட்டு’டன் உரையாற்றிய ஸ்டாலின்.. வைரலாகும் ‘ஆந்திரா’ வீடியோ
Recommended Video
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முகத்தில் குங்குமப் பொட்டுடன் ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி பதவி ஏற்பு விழாவில் வாழ்த்தும் வீடியோ வைரலாகி வருகிறது.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பகுத்தறிவுவாதியாக திகழ்ந்தவர். திமுகவின் எம்.பியாக இருந்த ஆதிசங்கரர் ஒரு முறை நெற்றியில் குங்குமப் பொட்டு நிறைய காட்சி தந்ததைப் பார்த்து என்னய்யா இது ரத்தப் பொட்டு என விமர்சித்தவர்.

தற்போதைய திமுக தலைவர் ஸ்டாலின், கோவில்கள் வரவேற்பளிக்கும் போது வியூதி, குங்கும வைத்தால் ஏற்றுக் கொள்வார். அதை உடனே அழித்துவிடுவார். இதுதான் அவரது பாணி.
தேர்தல் பிரசாரங்களின் போது ஸ்டாலினின் இத்தகைய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிமாக வைரலாகும். இந்து மதத்தை அவமதிக்கிறார் ஸ்டாலின் என்றெல்லாம் வசைமாரிகள் சரமாரியாக வந்து விழும்.
இத்தனைக்கும் ஸ்டாலின் குடும்பத்தினர் பய பக்தியுடன் கோவில் கோவிலாக வலம் வருகிறவர்கள்; எத்தனை பூஜை புனஸ்காரங்கள் இருக்கிறதோ அத்தனையும் செய்யக் கூடியவர்கள்தான். அது அவர்களது நம்பிக்கை என ஸ்டாலின் அதைப் பற்றி பேசுவதும் இல்லை.
இதனாலேயே ஸ்டாலினை இந்துக்களுக்கு எதிரி என பாஜக முத்திரை குத்தவும் முயற்சித்தது. அப்போதெல்லாம் இந்து யார்? இந்துத்துவா சக்தி என திமுக தலைமை விளக்கம் தந்து வாயை அடைத்து வந்தது.
‘கழக தலைவர் @mkstalin அவர்கள், ஆந்திர மாநில முதல்வராக பொறுப்பேற்றுள்ள திரு. @ysjagan அவர்களின் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தார்’
— DMK (@arivalayam) May 30, 2019
உடன்: தெலங்கானா மாநில முதல்வர் @TelanganaCMO சந்திரசேகர் ராவ் உட்பட பலர்.#YSJaganOathCeremony pic.twitter.com/G8iom3xK0d
இந்நிலையில் ஆந்திராவின் புதிய முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி இன்று பதவியேற்ற நிகழ்ச்சிக்கு ஸ்டாலின் சென்றார். ஜெகன் மோகன் ரெட்டியை வாழ்த்தி பேசும்போது ஸ்டாலின் முகத்தில் அழுத்தம் திருத்தமாக வைக்கப்பட்டிருந்த குங்குமப் பொட்டு இருந்தது.
அதைப் பற்றி கவலைப்படாமலேயே ஸ்டாலினும் பேசினார். ஸ்டாலின் குங்குமப் பொட்டுடன் காட்சி தரும் அந்த வீடியோ திமுகவும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் வெளியிட்டும் இருக்கிறது.
திராவிட இயக்க சிந்தனையால்தான் திமுக இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றது என பெருமிதம் பேசுகின்றனர் திமுக ஆதரவாளர்கள். மறுபக்கம் பாஜகவுக்கு க்ரீன் சிக்னல் கொடுப்பது போல குங்குமப் பொட்டுடன் மேடையில் காட்சி தருகிறார் ஸ்டாலின். ஸ்டாலினின் இந்த வீடியோ வைரலாகி இருப்பதுடன் கடுமையான விமர்சனங்களுக்குள்ளாகி இருக்கிறது.
யதார்த்தமாக குங்குமப் பொட்டுடன் ஸ்டாலின் உரையாற்றினாரா? அல்லது அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் உரையாற்றினாரா? என்கிற கேள்விகளும் முன்வைக்கப்படுகின்றன. இதற்கும் திமுக தரப்பில் பதில்கள் வந்து கொண்டிருக்கின்றன.
திமுகவின் ஒவ்வொரு நகர்வுமே உன்னிப்பாக கவனிக்கப்படுவதாலேயே இத்தகைய விமர்சனங்கள் வரத்தான் செய்யும் என்கின்றனர் அக்கட்சியின் மூத்த தலைவர்கள். இருப்பினும் இத்தகைய சர்ச்சைகளை ஸ்டாலின் தவிர்த்திருக்கலாம் என்பதும் திமுகவ்ன் ஒரு பகுதியினர் கருத்து.
-
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு! -
துண்டு துண்டாக உடைகிறதா திமுக ஓட்டு? சென்னை வேளச்சேரி தவெக விஜய் 18% வாக்குகளா? ஷாக் பாயிண்ட் -
விஜய்யால் தாமதமாகும் சிபிஎம்-திமுக தொகுதி பங்கீடு! பெ.சண்முகம் டிமாண்ட்! யோசிக்கும் ஸ்டாலின் -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்?












Click it and Unblock the Notifications