உத்தரகாண்ட்டில் பாஜக எம்பி தருண் விஜய் மீது சரமாரி தாக்குதல்- படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் கோவிலுக்குள் தலித்துகளை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்திய பாஜக எம்,பி. தருண் விஜய் மீது ஒரு கும்பல் கற்களை வீசி சரமாரியாக தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.
உத்தரகாண்ட்டின் ஜவுன்சார் பகுதி தலித் மக்களை கோயிலுக்கு அனுமதிக்க வேண்டும் என தருண் விஜய் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் சக்ரதாவில் உள்ள சில்கூர் தேவதா கோவிலுக்கு தருண் விஜய் சென்றார். அவருடன் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் தவுலத் குன்வாரும் சென்றிருந்தார்.

இருவரும் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு திரும்பும்போது வெளியே இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் கற்களை சரமாரியாக வீசி எறிந்தனர். இதில் தருண் விஜய் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சில்கூர் தேவதா கோவிலில் ஏற்கனவே தலித்துகளும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தருண் விஜய் மீதான தாக்குதல், அவர் தலித்துகளை அனுமதிக்க வேண்டும் என பிரசாரம் செய்ததால் நடத்தப்பட்டதா? அல்லது வேறு காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications