For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரியங்கா படத்தை செல்போனில் பார்த்த எம்.எல்.ஏ சஸ்பெண்ட்! கர்நாடக சட்டசபையில் செல்போனுக்கும் தடை!

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூரு: சட்டசபையில் அமர்ந்து தனது செல்போனில் ஆபாச கோணத்தில் பிரியங்கா காந்தி படத்தை பார்த்த பாஜக எம்.எல்.ஏ

பிரபு சவானை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் காக்கோடு திம்மப்பா உத்தரவிட்டார். இனிமேல் பேரவைக்குள் யாரும் செல்போன் கொண்டுவரக்கூடாது என்றும் உத்தரவிட்டார்.

Mobile phones banned in Karnataka assembly

கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் பெலகாவி சட்டசபை கட்டிடத்தில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் பேரவை கூட்டத்தில் பங்கேற்ற பாஜகவின் அவுராத் தொகுதி எம்.எல்.ஏ தனது செல்போனில் உள்ள படங்களை பார்த்தபடி இருந்தார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகளான பிரியங்கா காந்தியின் படமும் அந்த செல்போனில் இருந்தது. பிரியங்கா காந்தி, பேண்ட், சட்டை போட்டிருந்த படம் அவரது செல்போனில் இருந்தது. அந்த படத்தை ஜூம் செய்த எம்.எல்.ஏ சிறிது நேரம் அதையே பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அவர் ஜூம் செய்தது முகத்தை அல்ல.

ஆபாசமான கோணத்தில் கழுத்தின்கீழே அவர் ஜூம் செய்து வைத்திருந்தார். சபையின் மாடத்தில் இருந்து அவை நடவடிக்கைகளை வீடியோவில் பதிவு செய்த கன்னட செய்தி சேனல் வீடியோகிராபர்கள் இதை படம் பிடித்து ஒளிபரப்ப ஆரம்பித்துள்ளனர். இதனால் பாஜகவினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக பிரபு சவானை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி சபாநாயகருக்கு கோரிக்கைவிடுத்தது.

நேற்று நாள் முழுவதும் இதே பிரச்சினையை எழுப்பி ஆளும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவையில் எந்த பணிகளும் நடைபெறவில்லை. இதனிடையே இன்று சட்டசபையில் மீண்டும் அதே பிரச்சினை எழுந்தது. பாஜக சட்டசபை குழு தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் தனது எம்.எல்.ஏ யதேர்ச்சையாக அப்படத்தை பார்த்ததாக கூறினார். ஆனால் சமாதானத்தை ஏற்க மறுத்த சபாநாயகர் காக்கோடு திம்மப்பா, பிரபு சவானை நாள் முழுவதும் சஸ்பெண்ட் செய்வதாகவும், உடனடியாக அவர் பேரவையை விட்டு வெளியேறும்படியும் உத்தரவிட்டார்.

மேலும், 2012 டிசம்பர் 7ம்தேதி கர்நாடக சட்டசபை கூட்டுக் குழு அளித்த பரிந்துரைப்படி, சட்டசபைக்குள் இனிமேல் செல்போன்களுக்கு அனுமதி கிடையாது. எந்த உறுப்பினரும் செல்போனை உள்ளே கொண்டுவரக்கூடாது என்றும் சபாநாயகர் உத்தரவிட்டார்.

English summary
Use of mobile phones in the Karnataka Assembly was banned on Friday, a day after the House was rocked by chaos over a BJP member watching a zoomed in picture of Priyanka Gandhi during proceedings.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X