Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குளிக்கும் வீடியோ.. ஹோட்டல் ரூமுக்குள் நுழைந்த மாடலிங் "அழகி".. கிரேட் எஸ்கேப் ஆன பாஜக அமைச்சர்

ஹோட்டல் ரூமில் பாஜக அமைச்சரை சிக்க வைக்க 2 பேர் முயன்றுள்ளனர்

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: 4 நாட்களுக்கு முன்பு, ஜோத்பூரில் உள்ள ஹோட்டலின் 7வது மாடியில் இருந்து மாடல் அழகி ஒருவர் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.. இதுகுறித்து பல்வேறு பகீர் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்தவர் தீபாலி.. இவரது பாய் பிரண்ட் அக்‌ஷத்.. இவருக்கு சினு, நிக்கின் ஷர்மா, சாகர் என்று பல பெயர்களும் உண்டு.

இவர்கள் 2 பேருமே மாடலிங் துறையில் உள்ளனர்.. அழகு கலை நிபுணர்களாக இருந்து வருகின்றனர்... அதாவது பல மாடல் அழகிகளுக்கு ஸ்பெஷல் டிரெய்னிங் தந்து, அவர்களை விளம்பரப் படங்களில் நடிக்க வைப்பது, அதற்காக போட்டோ ஷூட் நடத்துவது இதெல்லாம் தான் இவர்களின் வேலை..

 மாடல் அழகி

மாடல் அழகி

ஆனால், இதைவிட மிக முக்கியமான தொழிலை இவர்கள் செய்கிறார்கள்.. பிரபலங்களுக்கு குறிவைத்து, அவர்களுடன் இந்த மாடல் அழகிகளை நெருக்கமாக பழக வைத்து, அதை வீடியோ, போட்டோ, அல்லது வாட்ஸ்அப் மெசேஜ்கள் எடுத்து கொண்டு, அதை ஆதாரங்களாக காட்டி, மிரட்டி பணம் பறிப்பதுதான் இந்த ஜோடியின் முக்கிய வேலை.. ஒருவேளை மிரட்டப்படும் நபர்களிடம் போதுமான பணம் தேறாவிட்டால், அவர்களால் வேறு ஏதாவது முக்கிய காரியங்களை சாதித்து கொள்வார்கள்.

 மாடல் அழகி

மாடல் அழகி

இந்த ஹனிடிராப் விவகாரத்தில் பாதிக்கப்பட்டர்கள் சிலர் புகார் தந்தனர். அந்த புகாரின்பேரில் 2016-ல் 17 பேர் கைதானார்கள்.. அதிலும் ஒருவர் அடிக்கடி கைதாகி ஜெயிலுக்கு செல்வார், மறுபடியும் வெளியே வந்து இதே வேலையை பார்ப்பார்.. அவர்தான் அந்த பாய் பிரண்ட் அக்‌ஷத்.. இந்த முறை இந்த ஜோடி குறி வைத்தது, ராஜஸ்தான் மாநில வருவாய் துறை அமைச்சர் ராம் லால் ஜாட்சுக்குதான்.. இதற்காக குங்குன் உபாத்யா என்ற மாடல் அழகியை தொடர்பு கொண்டனர்.. அமைச்சரை வலையில் விழ வைக்க வேண்டும் என்ற தங்கள் பிளானை அழகியிடம் சொன்னார்கள்..

 குளிக்கும் வீடியோ

குளிக்கும் வீடியோ

ஆரம்பத்தில் குங்கன் அதற்கு மறுத்தார், பிறகு பணத்தாசை காட்டி அவரை சம்மதிக்க வைத்தனர்.. இதற்காகவே சில மாடலிங் விளம்பரங்களையும் குங்கனுக்கு தந்து, அவரை நம்ப வைத்தனர்.. பிறகு, குங்கனை குளிக்க செய்து, அதை வீடியோவும் எடுத்து கொண்டது இந்த ஜோடி.. இப்போது அமைச்சரை சிக்க வைக்க அடுத்த பிளான் போட்டனர்.. அந்த சமயம், நிகழ்ச்சி ஒன்றிற்காக வந்திருந்த அமைச்சர், ஒரு ஹோட்டலில் தங்கியிருந்துள்ளார். இதையறிந்த அந்த கும்பல் அமைச்சருடன் குங்கனையும் தங்கும்படி வற்புறுத்தினர்..

 பாஜக அமைச்சர்

பாஜக அமைச்சர்

ஆனால், தனக்கு எதிராக இவ்வளவு சதி நடக்கிறது என்று எதுவுமே அந்த அமைச்சருக்கு தெரியாது... சம்பவத்தன்று, ஹோட்டல் ரூமுக்குள் பத்திரிக்கையாளர் என்று சொல்லி கொண்டு அழகியை உள்ளே அனுப்பி வைத்தது அந்த ஜோடி.. அழகியும் வேறு வழியில்லாமல் ரூமுக்குள் சென்று, தன்னை பத்திரிகையாளர் என்று அறிமுகப்படுத்தி கொண்டார்.. கையோடு கொண்டு சென்றிருந்த ஏதோ சம்மந்தமேயில்லாத டாக்குமெண்ட்டை காண்பித்து உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

 ஹோட்டல் ரூம்

ஹோட்டல் ரூம்

ஆனால் அமைச்சரோ, அந்த டாக்குமெண்ட்டை வாங்கி பார்த்துவிட்டு, தனக்கு சம்பந்தமில்லாத விவகாரம் என்று சொல்லி அந்த பெண்ணை திருப்பி அனுப்பி வைத்துவிட்டதாக தெரிகிறது... அப்போதும் அந்த ஜோடி விடவில்லை.. எப்படியாவது அமைச்சரை சிக்க வைக்க பிளான் போட்டது.. அதனால், அமைச்சர் தங்கியிருந்த சர்க்யூட் ஹவுஸ் எதிரே இருக்கும் இன்னொரு ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கியது.. அமைச்சரை சிக்க வைக்க, அழகியை தொந்தரவு செய்தது..

 தற்கொலை முயற்சி

தற்கொலை முயற்சி

தன்னால் இது எப்படி முடியும் என்று அழகி கதறி அழுதுள்ளார்.. அப்போதுதான், குளிக்கும் வீடியோவை சோஷியல் மீடியாவில் பதிவிடுவோம் என்று அழகியை மிரட்ட தொடங்கியது ஜோடி.. இதுதான் அழகி குங்கனுக்கு பெரும் மன உளைச்சலாகிவிட்டது.. இறுதியில் ஹோட்டல் லார்ட்ஸின் 7வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார்.. ஆனால் 7வது மாடி என்பதால் உயிர் போகவில்லை.. படுகாயம் மட்டுமே ஏற்பட்டது. இதனால் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 அதிர்ஷ்டசாலி

அதிர்ஷ்டசாலி

அவரிடம் நடத்திய விசாரணையில்தான் இதையெல்லாம் வாக்குமூலமாக சொன்னார்.. இப்போது அந்த ஜோடி கைதாகி விட்டது. இதெல்லாம் கேள்விப்பட்டு பாஜக அமைச்சர் ஷாக் ஆகிவிட்டாராம்.. இதை பற்றி அமைச்சர் சொல்லும்போது, "நான் பில்வாராவில் இருந்தபோது, வெள்ளிக்கிழமை இரவு என்னுடைய உதவியாளரை 2 பெண்கள் போன் செய்து, என்னை சந்திக்க நேரம் ஒதுக்கும்படி கூறி கேட்டுள்ளனர்.. அப்போது இரவு நேரமாகிவிட்டதால் மறுநாள் பொதுமக்களிடம் குறைகளை கேட்கும் சமயத்தில் சந்திக்கும்படி கூறினேன். அதற்கு முன்னதாக 2 பெண்கள் மீடியாவை சேர்ந்தவர்கள் என்று என்னிடம் அறிமுகப்படுத்தினர்.

 பாஜக அமைச்சர்

பாஜக அமைச்சர்

சனிக்கிழமை காலையில் வந்து என்னை சந்தித்து ஒரு ஆவணத்தை காட்டி அதில் உள்ள பிரச்சனையை தீர்த்து வைக்கும்படி சொன்னார்கள்.. அதைப் படித்துப் பார்த்த நான், அது என்னுடைய துறை சார்ந்தது அல்ல என்று கூறி நிராகரித்துவிட்டேன்.. அவர்களை இதற்கு முன்னால் நான் பார்த்ததுகூட இல்லை.. நான் மறுத்தபிறகு அவர்கள் வெளியேறிவிட்டனர்... இவ்வளவு நடந்துள்ளதா? நான் அதிர்ஷ்டசாலிதான்" என்றார். இப்படி ஒரு மாநில அமைச்சரையே சிக்க வைத்த கிரிமினல் ஜோடியால் பெரும் பரபரப்பு ராஜஸ்தானில் ஏற்பட்டுவிட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+