ரமலான் மாதத்தில் ஷஹர் செய்கையில் அதிர்ந்த காஷ்மீர், பாகிஸ்தான்: மக்கள் பீதி
ஸ்ரீநகர்: காஷ்மீரில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகி இருந்தது.
காஷ்மீரில் இன்று அதிகாலை 3.40 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் மலைப்பகுதியை மையமாகக் கொண்டு ஏற்பட்டது.

புனித ரமலான் மாதத்தின் 12வது நாளான இன்று நோன்பு வைக்க முஸ்லீம்கள் ஷஹர் உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருட் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் எதுவும் இல்லை.
முன்னதாக கடந்த 2005ம் ஆண்டு அக்டோபர் மாதம் 8ம் தேதி காஷ்மீரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியிருந்த அந்த நிலநடுக்கத்தால் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானிலும்:
பாகிஸ்தானின் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் இன்று அதிகாலை ரிக்டர் அளவுகோலில் 5.6 அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இஸ்லாமாபாத், ராவல்பின்டி, பெஷாவர், மலாகந்த், ஸ்வாட், லோயர் திர், அப்போத்தாபாத், மன்செஹ்ரா மற்றும் கில்கிட்-பால்திஸ்தான் பகுதியில் பல்வேறு இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications