மோடியின் ஜப்பான் பயணத்தால் தெற்காசியாவில் புதிய சகாப்தம்: சர்வதேச ஊடகங்கள்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் ஜப்பான் பயனத்தின் மூலமாக தெற்காசியாவில் புதிய சகாப்தம் உருவாகியிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் பாராட்டியுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி 5 நாள் பயணமாக ஜப்பானுக்கு சென்றிருந்தார். அந்நாட்டுடன் பல்வேறு துறை ஓப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டுள்ளன.

2-ம் உலகப் போருக்கு பின்னர் முதல் முறையாக இந்தியாவுக்கு ராணுவ தளவாடங்களை வழங்குவதற்கும் ஜப்பான் முன்வந்துள்ளது.
இந்த பயணம் பற்றி டெய்லி மெய்ல் ஊடகம் எழுதியிருப்பதாவது:
- தென்னாசியப் பிராந்தியத்தில் சர்வதேச உறவுகளில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது.
- இருநாடுகளும் நீண்டகாலம் எதிர்கொண்டிருக்கும் சவால்களையும் பிராந்திய பாதுகாப்பையும் இருநாடுகளும் இணைந்து எதிர்கொள்வதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளது
ப்ளூம்பெர்க் ஊடகம் எழுதியுள்ளதாவது:
- குஜராத் கலவரத்துக்குப் பின்னர் அமெரிக்கா, மோடிக்கு விசா வழங்க மறுத்துவந்தது.
- இங்கிலாந்தும் கூட குஜராத் முதல்வராக இருந்த மோடியை சந்திக்காமல் இருந்து வந்தது.
- தற்போது மோடியின் ஜப்பான் பயணம் என்பது 'கிழக்குநாடுகளை' நோக்கிய நட்புக்கரமாக கருதப்படுகிறது.
குவார்ட்ஸ் ஊடகத்தில் எழுதியிருப்பதாவது:
- சீனாஜப்பான் இடையேயான உறவு சீர்குலைந்த நிலையில் இந்தியாவுடனான நல்லுறவு ஜப்பானுக்கு சாதகமானது.
- இருப்பினும் புவிசார் அரசியல் நலன்கள் என்பது மோடியின் பயணத்தின் நோக்கமாக இல்லை
- புவிசார் வர்த்தகம் மற்றும் முதலீடு என்பதுதான் மோடியின் பயணத்தின் இலக்காக இருந்தது.
வால்ஸ்ட்ரீட் ஜேர்னல்:
- இந்தியாவை பொருளாதாரத்தில் வலுவாக கட்டமைக்க வேண்டிய நெருக்கடியில் இருக்கும் மோடி வலுவான நல்லுறவை ஜப்பான் பிரதமருடன் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.
- மோடியின் 5 நாள் பயணத்தின் மூலமாக ஜப்பான் முதலீடுகளை இந்தியா ஈர்த்துள்ளது.
More From
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications