மத்திய அமைச்சரவை மாற்றியமைப்பு - 9 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு
மத்திய அமைச்சரவை இன்று மாற்றி அமைக்கப்படுகிறது. புதிய அமைச்சரவையில் 9 பேர் பதவியேற்க
டெல்லி: மத்திய அமைச்சரவை இன்று மாற்றி அமைக்கப்படுகிறது. புதிய அமைச்சரவையில் 9 பேர் பதவியேற்க உள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய அமைச்சர்கள் காலை 10.30 மணிக்கு பதவியேற்கின்றனர். அஸ்வின் குமார் செளபே, சத்யபால் சிங், ஷிவ் பிரதாப் சுக்லா,ராஜ்குமார் சிங், வீரேந்திர குமார்,ஹர்தீப் சிங் புரி,கஜேந்திர சிங் ஷெகவாத், அனந்தகுமார், அல்போன்ஸ் ஆகிய 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த 2014 மே மாதம் பதவியேற்றது. இதுவரை 2 முறை மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது 3வது முறையாக ஞாயிறன்று அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட உள்ளது.
மத்திய அமைச்சரவையில் தற்போது 72அமைச்சர்கள் உள்ளனர். லோக்சபா உறுப்பினர் எண்ணிக்கையில் 15 சதவீதம் வரை அமைச்சர்களை நியமிக்கலாம். புதிய அமைச்சர்கள் 9 பேர் பதவியேற்க உள்ள நிலையில் மத்திய அரசில் 81 அமைச்சர்கள் இடம் பெற உள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஞாயிறு மாலை சீனாவுக்கு புறப்படுகிறார். அதற்கு முன்பு ஞாயிறன்று காலை 10.30மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெறும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications