For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாவ்... 50 வருஷமா பாடுறீங்களா... எஸ்.பி.பி.யைப் பார்த்து ஆச்சர்யப்பட்ட மோடி

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு வீட்டில் நடந்த சங்கராந்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தைப் பாராட்டினார்.

தெலுங்கு சமூகத்தினர் கொண்டாடும் சங்கராந்தி மற்றும் தமிழகர்களின் பொங்கல் விழா, மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடுவின் டெல்லி இல்லத்தில் இன்று நடைபெற்றது.

இதில் பிரதமர் நரேந்திர மோடி, சபாநாயகர் சுமித்ரா மகாஷன், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் முக்கிய விருந்தினர்கள் கலந்து கொண்டனர். பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியமும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

தூய்மை இந்தியா...

தூய்மை இந்தியா...

அப்போது மோடியின் கனவுத் திட்டமான தூய்மை இந்தியா குறித்த பாடலை மோடி முன்னிலையில் அவர் பாடிக் காட்டினார்.

பாராட்டு...

பாராட்டு...

அதனைத் தொடர்ந்து எஸ்.பி.பி. குறித்த விபரங்களைக் கேட்டறிந்த பிரதமர், 50 ஆண்டுகளாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் பாடியுள்ள அவரின் சாதனையைப் பாராட்டினார்.

இயற்கையோடு வாழ்க்கை...

இயற்கையோடு வாழ்க்கை...

மேலும், ‘இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறைக்கான தேவை குறித்து பேசிய மோடி, பல்லாண்டு காலமாக இந்தியர்கள் இயற்கையோடு வாழ்வதற்கு பழக்குவிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

8 மொழிகளில்...

8 மொழிகளில்...

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் தூய்மை இந்தியா குறித்து எஸ்.பி.பி. பாடிய பாடல் 8 மொழிகளில் தொலைக்காட்சி மற்றும் வானொலிகளில் ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்கது.

English summary
Legendary singer SP.Balasubramaniam was felicitated by Prime Minister Narendra Modi, Loksabha Speaker Sumitra Mahajan on completing 50years of music journey in the film industry at Venkaiah Naidu house during Sankranthi celebrations.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X