அரசுகள் இவ்ளோ வரி போட்டால் பெட்ரோல், டீசல் விலை எப்படி குறையும்? படித்து பாருங்க, ஷாக் ஆகிருவீங்க
Recommended Video

டெல்லி: பெட்ரோல், டீசல் விலையை குறைக்க தேவையான நடவடிக்கை எடுக்க நிதி அமைச்சகம் ரெடியாக இல்லை என்று தெரிகிறது.
விலை உயர்வில் இருந்து சாமானியர்கள் பாதிக்காமல் இருக்க கலால் வரியை குறைக்க முன்வராத மத்திய நிதி அமைச்சகம், மாநில அரசுகள் வேண்டுமானால் பெட்ரோல் மீதான வாட் வரியை குறைத்துக்கொள்ள வேண்டும் என நினைக்கிறதாம்.
பெட்ரோல் விலை 55 மாதங்களில் முதல் முறையாக புது உச்சமாக டெல்லியில், லிட்டருக்கு ரூ. 74.50-க்கு விற்பனையானது. டீசல் விலை 65.75 ரூபாயாகவும் விற்பனையானது.

திட்ட பற்றாக்குறையாம்
பட்ஜெட் திட்ட பற்றாக்குறையை குறைப்பதற்கான வழியைக் கடைப்பிடிக்க அரசு உறுதியாக உள்ளதால், கலால் வரியை குறைக்க வாய்ப்பே இல்லை என்று நிதி அமைச்சக அதிகாரிகள் சிலர் தெரிவித்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் கூறுகிறது.

இதுதான் பொருளாதார நிலை
3.5 சதவீதமாக உள்ள மொத்த உள்நாட்டு உள்பத்தி பற்றாக்குறையை, 3.3 சதவீதமாக குறைக்கும் வேலையில் நிதி அமைச்சகம் ஈடுபட்டுள்ளதால், பெட்ரோலிய பொருட்கள் மீதான வரியை குறைத்து, சாமானியர்களுக்கு நிம்மதியளிக்கும் அறிவிப்பு வெளியாகாது என கூறப்படுகிறது.

வரி எவ்வளவு தெரியுமா?
மத்திய அரசு பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.19.48 கலால் வரியாகவும், டீசல் மீது ரூ.15.33 வரியாகவும் விதிக்கிறது. மாநிலங்களின் வாட் வரி விதிப்பு மாநிலத்திற்கு மாநிலம் வேறு பகுதிகிறது. டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் மீதான வாட் வரி ரூ.15.84 என்ற அளவிலும், டீசல் மீதான வாட் வரி ரூ.9.68 என்ற அளவிலும் உள்ளது.

ஜிஎஸ்டிக்குள் ஏன் பெட்ரோல் வரவில்லை
மத்திய அரசு கலால் வரியை குறைக்க விரும்பவில்லை, மாநில அரசுகளும் வாட் வரியை குறைக்க விரும்பவில்லை. பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வர எந்த அரசுமே விரும்பவில்லை. இப்படி வரி வருவாயை கணக்கில் வைத்து மத்திய, மாநில அரசுகள் காய் நகர்த்துவதால்தாலும், இத்தனை வரி விதிப்புகள் காரணமாகவும்தான் சாமானியர்களுக்கு பெட்ரோல், டீசல் விலை குதிரை கொம்பாக மாறிவிட்டது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications