வாங்க, எல்லாரும் சேர்ந்து யோகா பண்ணலாம்... சோனியா, ராகுல், கெஜ்ரிவாலுக்கு மோடி அரசு அழைப்பு!
டெல்லி: உலக யோகா தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத்தலைவர் ராகுல், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆகியோருக்கு மத்திய அரசு அழைப்பு அனுப்பியுள்ளது.
ஆண்டுதோறும் ஜூன் மாதம் 21-ந்தேதி உலக யோகா தினமாக அனுசரிக்கப்படும் என ஐ.நா. சபை கடந்த டிசம்பர் மாதம் அறிவித்தது. அதன்படி வருகிற 21ம் தேதி முதலாவது உலக யோகா தினம் அனுசரிக்கப் பட உள்ளது.

இதனை விமர்சையாகக் கொண்டாட மத்திய அரசு ஏற்பாடுகள் செய்து வருகிறது. அன்றைய தினம் டெல்லி ராஜபாதையில் குழந்தைகள், போலீசார், ராணுவ வீரர்கள் என சுமார் 1 லட்சம் பேர் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மற்றும் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருக்கும் மத்திய அரசு அழைப்பு அனுப்பியுள்ளது.
இதேபோல், அனைத்து அமைச்சர்கள், எம்.பிக்கள் மற்றும் யோகா பயிற்சியாளர்களுக்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications