வங்கதேசம் வழங்கிய உயரிய விருதை வாஜ்பாயின் குடும்பத்தாரிடம் ஒப்படைத்த மோடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வங்கதசே அரசு முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு போர் விடுதலை விருதை வழங்கியது. அவரது சார்பில் விருதை பெற்ற பிரதமர் மோடி அதை வாஜ்பாயின் குடும்பத்தாரை சந்தித்து ஒப்படைத்தார்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது வங்கதேச சுதந்திரப் போராட்டத்தில் அதிக ஈடுபாடு காட்டிய முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அந்நாட்டு அரசு போர் விடுதலை விருதை வழங்கியது. விருதை வாஜ்பாய் சார்பில் மோடி பெற்றுக் கொண்டார். வங்கதேசத்தின் உயரிய விருது வாஜ்பாய்க்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த விருதை எடுத்துக் கொண்டு மோடி வாஜ்பாயின் வீட்டிற்கு சென்று அவரின் குடும்பத்தாரிடம் ஒப்படைத்தார். இது குறித்து மோடி ட்விட்டரில் கூறியிருப்பதாது,

அடல்ஜியை சந்தித்தேன். வங்கதேச அரசு வழங்கிய போர் விடுதலை விருதை அவரது குடும்பத்தாரிடம் அளித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்து புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

மோடியிடம் இருந்து விருதை வாஜ்பாயின் வளர்ப்பு மகள் நமீதா பட்டாச்சாரியா மற்றும் அவரது கணவர் ரஞ்சன் பட்டாச்சாரியா ஆகியோர் பெற்றுக் கொண்டனர். மோடியுடன் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும் வாஜ்பாயின் வீட்டிற்கு சென்றிருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+