2015-2016ல் மோடி, மத்திய அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயண செலவு ரூ.567 கோடி மட்டுமே!
டெல்லி: 2015-2016ம் நிதியாண்டில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ததற்கு ரூ.567 கோடி செலவாகியுள்ளது தெரிய வந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் கடந்த 2015-2016ம் நிதியாண்டில் வெளிநாடுகளுக்கு பயணம் சென்று வந்ததால் அரசுக்கு ரூ.567 கோடி செலவாகியுள்ளது பட்ஜெட் ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. அவர்களின் பயணச் செலவு முந்தைய ஆண்டை விட 80 சதவீதம் அதிகரித்துள்ளது.

மோடி மற்றும் மத்திய அமைச்சர்களின் பயணச் செலவு ரூ.269 கோடியாக இருக்கும் என 2015-2016ம் நிதியாண்டின் துவக்கத்தில் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த செலவு ரூ.567 கோடியாக ஆகியுள்ளது.
இந்நிலையில் அடுத்த நிதியாண்டில் தனது வெளிநாட்டு பயணங்களை 54 சதவீதம் வரை குறைத்துக் கொள்வதாக மோடி உறுதியளித்துள்ளார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 75 மத்திய அமைச்சர்கள் இருந்தனர். ஆனால் மோடியின் அமைச்சரைவயில் 64 பேர் தான் உள்ளனர்.
கடந்த ஆண்டில் மத்திய அமைச்சர்களின் சம்பளம் 25 சதவீதம் வரை அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications