போபாலில் 3 நாள் பிரமாண்டமாக நடக்கிறது உலக ஹிந்தி மாநாடு.. பிரதமர் தொடங்கி வைக்கிறார்
போபால்: மத்திய பிரதேச தலைநகரம் போபால் நகரில் உலக ஹிந்தி மாநாடு வரும் 10ம் தேதி தொடங்குகிறது. பிரதமர் நரேந்திர மோடி இந்த மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.
ஹிந்தி மொழியின் புகழை உலகம் முழுவதும் பரப்பும் நோக்கில் கடந்த 1975ம் ஆண்டு முதல் உலக இந்தி மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் 9வது மாநாடு கடந்த 2012ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடந்தது.

அந்த மாநாட்டின் போது, அடுத்த மாநாட்டை இந்தியாவில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் 10வது உலக ஹிந்தி மாநாடு மத்திய பிரதேச தலைநகர் போபாலில் 10ம் தேதி வரும் வியாழக்கிழமை தொடங்கி 3 நாள் நடக்கிறது.
‘ஹிந்தி உலகம்: விரிவாக்கமும், நோக்கமும்' என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த மாநாட்டில் பல்வேறு தலைப்புகளின் கீழ் 24 அமர்வுகள் நடைபெறுகின்றன. இந்த மாநாட்டை வெளியுறவுத்துறை அமைச்சகமும், மத்திய பிரதேச அரசும் இணைந்து நடத்துகின்றன. 27 நாடுகளில் இருந்து விருந்தினர்கள் பங்கேற்கின்றனர். பல்வேறு மொழி அறிஞர்களும் உரையாற்றுகின்றனர்.
மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். மாநாட்டின் இறுதி நாளில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சன் ஆகியோர் ஹிந்தி மொழி தொடர்பான தலைப்புகளில் உரையாற்றுகின்றனர்.
மாநாட்டின் ஒரு பகுதியாக ஹிந்தி மொழி தொடர்பான கண்காட்சியும் நடைபெறுகிறது. இதில் ‘கூகுள்', ‘ஆப்பிள்' உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications