4 வருடத்தில் 19 நாட்கள் மட்டுமே நாடாளுமன்றம் வந்த மோடி.. டெல்லி ஹைகோர்ட்டில் வழக்கு
பிரதமர் மோடி, நாடாளுமன்றத்தில் இதுவரை வெறும் 19 நாட்கள் மட்டுமே பேசியுள்ளார்.
Recommended Video

டெல்லி: பிரதமர் மோடி, நாடாளுமன்றத்தில் இதுவரை வெறும் 19 நாட்கள் மட்டுமே பேசியுள்ளார். இந்த தகவல் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் பிரதமர் மோடிக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மீ கட்சியை சேர்ந்த ராஜ்ய சபா உறுப்பினர் சஞ்சய் சிங் இந்த வழக்கை தொடுத்துள்ளார்.
இந்த வழக்கு மீது இன்று விசாரணை நடத்தப்படும். பிரதமர் மோடிதான் இந்திய பிரதமர்களில் மிகவும் குறைவான நாட்கள் நாடாளுமன்றத்தில் பேசியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எத்தனை
பிரதமர் மோடி தன்னுடைய நான்கு ஆண்டுகால ஆட்சியை முடித்துள்ளார். இதுவரை பல முறை நாடாளுமன்றம் கூடியுள்ளது. ஆனால் மொத்தம் 19 நாட்கள் மட்டுமே அவர் நாடாளுமன்றம் வந்துள்ளார். அதிலும் வருடத்திற்கு 4 நாட்கள் மட்டுமே அவர் நாடாளுமன்றம் வந்துள்ளார். முக்கியமான நாட்களில் அவர் நாடாளுமன்றம் வரவேயில்லை.

பேசியது என்ன
நாடாளுமன்றம் வந்த பின்பும் பெரும்பாலான சமயங்களில் அவர் பேசாமலே இருந்துள்ளார். அவர் 6 முறை சில திட்டங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இரண்டு முறை நேரு குறித்து குற்றச்சாட்டு வைத்துள்ளார். புதிய அமைச்சர்களை அறிமுகப்படுத்தியுள்ளார். இரண்டு முறை பாகிஸ்தான் குறித்தும், காங்கிரசின் 10 ஆண்டு ஆட்சி குறித்தும் பேசியுள்ளார். 4 முறை விவாதங்களில் பேசியுள்ளார்.

அதிகம்
அவர் இந்த நான்கு நாட்களில் நாடாளுமன்றத்தில் இருந்ததை விட அதிகமாக பிரச்சாரம் செய்துள்ளார். மொத்தமாக 800 இடங்களில் அவர் பிரச்சாரம் செய்ய பேசியுள்ளார். எல்லா வாரமும் வானொலி மூலம் , மான் கி பாத்தில் பேசியுள்ளார். ஒரு முறை பண மதிப்பிழப்பு செய்யப்படுவதாக பேசியுள்ளார். ஆனால் மக்கள் பிரச்சனைகள் எதிலும் அவர் பேசவேயில்லை.

காரணம் என்ன
மக்களின் முக்கியமான பிரச்சனைகளான விலைவாசி உயர்வு, பெட்ரோல் டீசல் உயர்வு, ஜிஎஸ்டி, மத பிரச்சனை, ஜாதி படுகொலை, வங்கிகள் செய்யும் மோசடிகள் என எதிலும் பிரதமர் பேசவில்லை. கூடுதல் தகவலாக, பிரதமர் நாடாளுமன்றம் நடக்கும் சமயங்களில் அதிகமாக வெளிநாடுகளில் இருந்துள்ளார். அவர் அதிக நாட்களை நாடாளுமன்றத்தை விட வெளிநாட்டில்தான் கழித்துள்ளார்.
-
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே!












Click it and Unblock the Notifications