உண்மைகளைத் திரித்துக் கூறுகிறார் மோடி- பிரதமர் மன்மோகன் சிங்
ஜபல்பூர்: பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி உண்மைகளைத் திரித்துக் கூறுகிறார்... பொய்ப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார் என பிரதமர் மன்மோகன் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
காங்கிரஸூக்கு களங்கம் உண்டாக்க வேண்டும் என்ற ஆர்வக் கோளாறினால், பாஜகவின் நரேந்திர மோடி அடிக்கடி தவறான தகவல்களை அளிப்பதிலும், வரலாற்று உண்மைகளைத் திரிப்பதிலும் ஈடுபட்டு வருகிறார்.

காங்கிரஸைத் தாக்கும் ஆர்வத்தில், பாஜக போற்றும் தலைவர் ஒருவரைப் பற்றியே அவர் ஒருமுறை திரித்துப் பேசியிருக்கிறார்.
இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளில் அரசியல் தலைவர்களுக்கு ஆர்வம் இருப்பதில் தவறில்லை.
ஆட்சிக்கு வந்தால் செய்யவிருக்கும் நல்ல விஷயங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்வதில் அந்த ஆர்வம் இருக்க வேண்டும்.
ஆனால், பாஜக-வைப் பொருத்தவரை அவர்களது ஆர்வமெல்லாம் மற்றவர்களைக் குறைகூறுவதில் மட்டும்தான் இருக்கிறது. அது ஆர்வக் கோளாறாக முடிகிறது.
கடந்த சில மாதங்களாக, அரசியல் வெகு வேகமாக தரம் தாழ்ந்து வருவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். இந்தப் போக்கைத் தொடங்கி வைத்தது பாஜக-தான்.
மத்தியப் பிரதேசத்தைப் பொருத்தவரை, மற்ற மாநிலங்களை விட குழந்தை இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. கல்வியறிவில் அது 21-ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
ஆண் பெண் பிறப்பு விகிதாசாரம் 932-இலிருந்து 912-ஆகக் குறைந்துவிட்டது. சாலைகள் படு மோசமாக உள்ளன.
இவற்றையெல்லாம் பார்க்கும்போது, மாநிலத்தை ஆளும் பாஜக அரசு வளர்ச்சியைப் பற்றிப் பேசுவது ஆச்சரியமாக உள்ளது," என்றார்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications