ஒரு வார அயர்லாந்து, அமெரிக்கப் பயணம் முடிந்து தாயகம் திரும்பினார் மோடி
டெல்லி: அயர்லாந்து மற்றும் அமெரிக்காவில் ஒரு வார கால புயல் வேகப் பயணத்தில் ஈடுபட்டிருந்த பிரதமர் மோடி நேற்று நள்ளிரவு வாக்கில் தாயகம் திரும்பினார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
செப்டம்பர் 23ம் தேதி 7 நாள் பயணமாக கிளம்பினார் மோடி. முதலில் அயர்லாந்துக்குச் சென்றார். பின்னர் அங்கிருந்து அமெரிக்கா புறப்பட்டார். சிலிக்கான் வேலிக்கு விசிட் அடித்த அவர் அங்கு முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் உயர் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார். முதலீடு தொடர்பாக அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதன் பின்னர் பேஸ்புக், கூகுள் நிறுவனங்களின் தலைமை அலுவலகங்களுக்குச் சென்றார். பேஸ்புக் நிறுவனர் மார்க்குடன் கலந்துரையாடலில் கலந்து கொண்டார்.
பின்னர் சான்ஜோஸ் நகரில் இந்தியர்களிடையே உருக்கமாக பேசினார். இதையடுத்து நியூயார்க் சென்ற அவர் அங்கு அதிபர் ஒபாமா மற்றும் பல்வேறு நாட்டுத் தலைவர்களைச் சந்தித்தார். ஐ.நா சபையில் பின்னர் உரையாற்றினார்.
இதைத் தொடர்ந்து அவரது பயணம் முடிவுக்கு வந்தது. நேற்று நள்ளிரவு வாக்கில் அவர் டெல்லி வந்து இறங்கினார். விமான நிலையத்தில் மூத்த பாஜக தலைவர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications