லோக்சபா தேர்தலில் மோடிக்காக பிரசாரம் செய்த குழுவினருக்கு விருது!
பெங்களூரு: லோக்சபா தேர்தலி்ல் நரேந்திர மோடி குழுவினருக்காக நடத்தப்பட்ட டிஜிட்டல் மற்றும் சோசியல் மீடியா பிரசாரத்திற்கு டேட்டாகுவெஸ்ட் விருது கிடைத்துள்ளது.
இந்த விருது மோடியின் பிரசாரக் குழுவினருக்குக் கிடைத்துள்ளது. பாஜக தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சியைப் பிடிக்க இந்த பிரசாரக் குழுவினரின் அயராத பிரசாரம்தான் பெரும் உதவியாக இருந்தது என்பது நினைவிருக்கலாம்.
இந்த குழுவினருக்கே தற்போது டேட்டாகுவெஸ்ட் பாத்பிரேக்கர் விருது கிடைத்துள்ளது. இந்த விருதை பாஜகவின் ஐடி செல் தலைவரான டாக்டர் அரவிந்த் குப்தா பெற்றுக் கொண்டார்.

மோடியின் திறமை...
பின்னர் அவர் விழாவில் பேசுகையில், ‘பிரதமர் நரேந்திர மோடி, ஐடியை மிகவும் திறமையாக பயன்படுத்துகிறார். இந்திய மக்களிடம் மிகவும் நெருங்கிச் செல்ல தகவல் தொழில்நுட்பத்தை அவர் பெரிதும் பயன்படுத்துகிறார். அரசின் நோக்கம், கொள்கைகள், திட்டங்களையும் அவர் தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் மக்களிடம் கொண்டு செல்கிறார்' என்றார்.

ஐடி பெர்சன் விருது...
ஸ்னாப்டீல் நிறுவன இணை நிறுவனரும், தலைமை செயலதிகாரியுமான குனால் பாஹலுக்கு 2014ம் ஆண்டுக்கான சிறந்த டேட்டாகுவெஸ்ட் ஐடி பெர்சன் விருது கிடைத்தது. ஸ்னாப்டீல் நிறுவனத்தை நிறுவி அதை குறுகிய காலத்தில் இந்தியாவின் அதி வேக வளர்ச்சி பெற்ற இ காமர்ஸ் தளமாக மாற்றியதற்காக இந்த விருது அவருக்கு கிடைத்துள்ளது.

வாழ்நாள் சாதனையாளர் விருது...
வாழ்நாள் சாதனையாளர் விருதை நாஸ்காம் இணை நிறுவனர் செளரப் ஸ்ரீவத்சவா பெற்றார். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் தலைவர் அருந்ததி பாட்டச்சார்யா டேட்டாகுவெஸ்ட் ஜூரி சிறப்பு விருதைப் பெற்றார்.
இன்போசிஸ் நிறுவனர்...
இந்த விருதுகளை இன்போசிஸ் நிறுவனர் என்.ஆர்.நாராயணமூர்த்தி அனைவருக்கும் வழங்கினார். இவர் 1996ம் ஆண்டு டேட்டாகுவெஸ்ட் ஐடி பெர்சன் விருதைப் பெற்றவர் என்பது நினைவிருக்கலாம்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே!












Click it and Unblock the Notifications