கார்கிலில் 'கன்னி' பேச்சு: முன்னேற்றம் முன்னேற்றம் என முழங்கிய மோடி
கார்கில்: கார்கிலில் முதன் முதலாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளித்து பேசினார்.
பிரதமர் மோடி இன்று காலை ஜம்மு காஷ்மீர் சென்றார். முதலில் லே பகுதியில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அதன் பிறகு அவர் அங்கிருந்து கிளம்பி கார்கில் சென்றார்.
1999ம் ஆண்டு நடந்த போருக்கு பிறகு கார்கில் வந்துள்ள முதல் பிரதமர் மோடி தான். இந்நிலையில் மோடி கார்கிலில் நடந்த கூட்டத்தில் பேசுகையில்,

கார்கில்
கார்கிலுக்கு வந்து உங்களை எல்லாம் சந்திக்க நான் கொடுத்து வைத்துள்ளேன்.

கைதட்டல்
முதல்வர் உமர் அப்துல்லா கூறியது போன்று இன்று தான் கைதட்டல் சப்தத்தை கேட்கிறேன். ஆனால் நான் கடந்த முறை வந்தபோது துப்பாக்கிச்சூடு சப்தத்தை கேட்டேன்.

தேசப்பற்று
கார்கில் மக்களின் தேசப்பற்று இந்திய மக்களுக்கு உத்வேகமாக உள்ளது. கார்கில் மற்றும் அதன் மக்களுக்கு தலை வணங்குகிறேன்.

மின்சாரம்
மின்சாரம் என்பது டிவி, செல்போன்களுக்கு மட்டும் அல்ல காஷ்மீரில் உள்ள நிறுவனங்களுக்கும் தான். இங்கு உள்ள வாலிபர்கள் கடினமாக உழைத்து பணம் சம்பாதித்து தங்களின் குடும்பத்தாரை காப்பாற்றுவார்கள் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை.

தொண்டன்
நான் கார்கிலுக்கு வருவது இது ஒன்றும் முதல் முறை அல்ல. முன்னதாக பாஜக தொண்டனாக வந்து இங்குள்ள வீரர்கள் துணிச்சலுடன் சண்டையிட்டதை பார்த்துள்ளேன்.

லே
லே அல்லது வடகிழக்கு பகுதியாக இருக்கட்டும், முன்னேற்றம் மூலம் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது தான் என் திட்டம்.

முன்னேற்றம்
நாங்கள் முன்னேற்றத்தில் ஆர்வம் கொண்டுள்ளோம். அனைவரையும் முன்னேற்றத்தை நோக்கி அழைத்துச் செல்வோம்.

இடம்பெயர்ந்து
ஜம்மு காஷ்மீர் மக்களில் 20 சதவீதம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்களின் மறுவாழ்வுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்.

விவசாயிகள்
காஷ்மீரில் உள்ள விவசாயிகளுக்கு தொழில்நுட்ப வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். வாஜ்பாயின் கனவை நனவாக நடவடிக்கை எடுத்துள்ளோம்.

லஞ்சம்
என் ஆட்சியில் அதிகாரிகள் லஞ்சம் கேட்கவோ, மக்கள் லஞ்சம் கொடுக்கவோ விட மாட்டேன்.

வேலைவாய்ப்பு
கார்கிலில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்படும். முன்னேற்றத்திற்கு தேவையான அனைத்தையும் நிச்சயம் செய்வோம் என்றார் மோடி.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications