"மிஸ்ஸைலை" விட்டு தாக்கினாலும் தாங்கும் "ஏர் இந்தியா ஒன்".. மோடிக்காக தயாராகும் அதிநவீன விமானம்!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை போன்ற அதி நவீன வசதி கொண்ட விமானத்தில்தான் இனிமேல் வெளிநாடுகளுக்கு பறக்க உள்ளார்.
பிரதமராக பதவியேற்ற பிறகு சுமார் 40 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார் மோடி. இந்த பயண காலத்தில் உள்நாட்டு போரை சந்திக்கும் பல்வேறு நாடுகளை தாண்டி விமானம் பறக்க வேண்டியுள்ளது. எனவே ஏவுகணை தாக்குதலுக்கு விமானம் உள்ளாக வாய்ப்புள்ளது.
இதை கருத்தில் கொண்டு, மோடியின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அதிநவீன விமானத்தை ஏர் இந்தியா உருவாக்குகிறது. தற்போது மோடி பயன்படுத்தி வரும் போயிங் 747 என்ற பழைய வகை விமானத்தை தவிர்த்துவிட்டு, புதிய விமானத்தை அவர் பயன்படுத்த உள்ளாராம்.

பாரிக்கர் பச்சைக்கொடி
ஜூன் 25ம் தேதி நடைபெற உள்ள பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் மீட்டிங்கின்போது, பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர், இந்த டீலுக்கு பச்சைக்கொடி காட்ட உள்ளாராம். போயிங் 777-300s வகையை சேர்ந்த இந்த விமானம், 'ஏர் இந்தியா ஓன்' என்று அழைக்கப்படுமாம்.

நவீன விமானம்
ஓய்வு பெற்ற ஏர் கமாண்டரும், பாதுகாப்பு துறை வல்லுநருமான, பிரசாந்த் தீக்ஷித் கூறுகையில், மோடிக்காக உருவாகிவரும் புதிய விமானம், எதிரிகளின் ரேடார் கண்காணிப்பு கருவிகளின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு பறக்க வல்லது என்றார்.

ராக்கெட் தாக்கினாலும் முடியாது
இந்த விமானத்தில் உள்ள சில அதிரடி அம்சங்கள் இவைதான்: விமான பயணத்தில் இருந்தபடியே வெளியுலகை தொடர்புகொள்ள தேவையான புதியவகை வசதிகள் இதில் உள்ளன. கிரானைட் மற்றும் ராக்கெட் மூலம் தாக்கினாலும், இந்த விமானம் பாதிக்கப்படாது. எனவே தீவிரவாதிகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியும்.

ரேடாருக்கு பதிலடி
விமானத்தை கண்காணிக்கும் எதிரிகளின் ரேடார் கருவிகளை செயலிழக்க செய்ய இதில் வசதியுள்ளது. ரேடார் பார்வையில் படாமலும் தப்பிக்க முடியும்.

ஏவுகணையை முறியடிக்கலாம்
ஏவுகணை தாக்குதலை முறியடிக்கும் புதியவகை டெக்னாலஜி இந்த விமானத்தில் இடம் பெற்றிருக்கும். இதனால் ரேடாரில் கண்காணித்து விமானத்தை ஏவுகணை மூலம் தாக்கிவிடலாம் என நினைக்கும் எதிரிகளால் அது முடியாமல் போகும்.

கண்காணிப்பு
ரேடார் மூலம், விமானம் கண்காணிக்கப்படுகிறதா, நம்மை நோக்கி ஏவுகணை தாக்குதல் நடத்தப்படுகிறதா என்பதை முன்கூட்டியே கண்காணித்து எச்சரிக்கும் வசதியும் இந்த விமானத்தில் உள்ளது.

சாப்பாடு வசதி
இந்த விமானத்தில் 2 ஆயிரம் பேருக்கு தேவையான உணவை ஒரே நேரத்தில் கெட்டுப்போகாமல் சேமித்து வைக்க முடியும். அவசர காலங்களில் இந்த வசதி கை கொடுக்கும்.

எரிபொருள் நிரப்பலாம்
அவசர தேவை என்றால் பறந்தபடியே, இன்னொரு விமானத்தில் இருந்து இந்த விமானத்திற்கு எரிபொருளை அந்தரத்திலேயே நிரப்பிக்கொள்ளும் நவீன வசதியும் இதில் உள்ளது.

டாக்டர்கள், ஆபரேசன் தியேட்டர்
விமானத்தில் மருத்துவ சேவைக்காக 24 மணி நேரமும், டாக்டர்கள், மருத்துவ உபகரணங்களுடன் தயார் நிலையில் இருப்பார்கள். நம்பினால் நம்புங்கள்.. இந்த விமானத்தில் அவசர தேவைக்காக, ஆபரேசன் தியேட்டரும் உள்ளதாம். எந்த வகை உடல் பிரச்சினையையும் சமாளிக்கத்தான் இந்த ஏற்பாடு.

தொடர்பு வசதி
இணையதளம், ரேடியோ, மற்றும் தொலைபேசி வசதி ஆகிய அனைத்துமே இந்த விமானத்தில் கிடைக்கும். தரையில் இருப்பதை போன்ற உணர்வை இந்த வசதிகள் வழங்கும்.

மீட்டிங் போடலாம்
மொத்தம் 19 தொலைக்காட்சி பெட்டிகள் விமானத்திற்குள் உள்ளனவாம். ஆலோசனை கூட்டம் நடத்துவதற்காக உள்ளேயே அதி நவீன வசதிகளுடன் அலுவலகம் மற்றும் படுக்கையறையும் உள்ளது.












Click it and Unblock the Notifications